பயங்கர அதிர்ச்சி சம்பவம்!...பாலியல் குற்றத்திற்கு துணைபோன காஷ்மீர் நீதிமன்றம்?
Terrible shocking incident Kashmir court involved in sex crime
இந்திய விமான படையை சேர்ந்த இளம் பெண் அதிகாரி ஒருவர், விமானப்படையின் விங் கமாண்டர் தர உயரதிகாரி மீது பாலியல் புகார் அளித்துள்ள விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக பெண் அதிகாரி அளித்துள்ள புகாரில், 2023-ம் ஆண்டு டிசம்பர் 31-ம் தேதி இரவு நடந்த புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது, ஒரு உயரதிகாரி தன்னை அவரது அறைக்கு தனியாக அழைத்து பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாகவும், இது தொடர்பாக மேலிடத்தில் புகார் அளித்தபோதும் உரிய முறையில் விசாரணை நடத்தப்படவில்லை என்று குற்றம் சாட்டியுள்ளார்.
மேலும் இந்த சம்பவத்தால் தான் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் மிகுந்த பாதிப்பிற்கு ஆளானதாக தெரிவித்துள்ளார். இந்நிலையில் இது தொடர்பான வழக்கை விசாரணை செய்த ஜம்மு காஷ்மீர் நீதிமன்றம், குற்றம் சாட்டப்பட்ட விமானப்படை உயரதிகாரிக்கு முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது.
அந்த உத்தரவில், விமானப்படை நிலையத்தில் விங் கமாண்டராக பணிபுரிந்து வருபவர் கைது செய்யப்பட்டால் அவரது நற்பெயருக்கு களங்கம் ஏற்படும் என்பதால் அவருக்கு முன்ஜாமீன் வழங்கப்படுகிறது என்றும், அதே சமயம் வழக்கு விசாரணையை தொடர நீதிமன்றம் அனுமதி அளிக்கிறது என்று குறிப்பிட்டுள்ளது. இருந்த போதிலும், நீதிமன்றத்தில் அனுமதியின்றி இந்த வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யக்கூடாது என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
English Summary
Terrible shocking incident Kashmir court involved in sex crime