மணிப்பூரில் மீண்டும் பயங்கர வன்முறை!...காவல் நிலையம், பள்ளி கட்டிடங்களுக்கு தீ வைத்து நாசம்! - Seithipunal
Seithipunal


மணிப்பூர் மாநிலத்தில் கடந்த  2023-ம் ஆண்டிலிருந்து மெய்தி மற்றும் குகி சமூகத்தினர் இடையே  ஏற்பட்ட கலவரம் ஓராண்டுக்கு மேலாக நீடித்து வருகிறது

இந்த வன்முறையில்  சிறுவர்கள், பெண்கள் உள்பட ஏராளமானவர்கள் உயிரிழந்தனர். மேலும், கலவரத்தில் துப்பாக்கிகள், வெடிகுண்டுகள் மற்றும் ராக்கெட் லாஞ்சர்கள் போன்றவற்றால் வன்முறை தொடர்ந்து  நீடித்து வருகிறது.

இதற்கிடையே கடந்த மாதம் மணிப்பூரில் உள்ள மேற்கு இம்பால் நகரில் கவுடிரக் பகுதியில் குகி பயங்கரவாதிகள் சிலர் கும்பலாக கூடி ராக்கெட்டுடன் கூடிய எறிகுண்டுகளை குவித்ததோடு   உயர் தொழில்நுட்பம் வாய்ந்த ஆளில்லா விமானங்களின் உதவியுடன் எறிகுண்டுகளை வீசி, துப்பாக்கி சூடு நடத்தியது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், ஜிரிபம் மாவட்டம் போரோபெக்ரா கிராமத்திற்குள் நள்ளிரவில் ஊடுருவிய போராட்டக்குழுவினர் பயங்கர ஆயுதங்களுடன் காவல் நிலையம் மீது வெடிகுண்டுகளை வீசியெறிந்து தாக்குதல் நடத்தினர். இதற்கு  பதிலடியாக அவர்கள் மீது போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இருந்த போதிலும்  இதில் உயிரிழப்பு குறித்த தகவல்கள் வெளியாகவில்லை.

முன்னதாக அங்குள்ள பள்ளி மீது போராட்டக்குழுவினர் தீ வைத்ததில், கல்வி உபகரணங்கள் உள்பட பல லட்சம் ரூபாய்  மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமாகின. தொடர்ந்து போராட்டக்குழுவை சேர்ந்த 2 பேரை கைது செய்த போலீசார் இது தொடர்பாக தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Terrible violence again in manipur police station school buildings were set on fire


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->