பயங்கரவாதிகள் மீது தாக்குதல்: உயிரிழந்தவர்களின் வாரிசுகளுக்கு அரசு வேலை!
terrorists Attack killed heirs Government work
ஜம்மு காஷ்மீர் நிர்வாகம், பூஞ்ச் பகுதியில் பயங்கரவாதிகள் மீது தாக்குதல் நடத்திய போது பலியான பொதுமக்கள் மூவரின் வாரிசுகளுக்கு இழப்பீடு மற்றும் அரசு வேலை வழங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜம்மு காஷ்மீரில் நடந்த இந்த தாக்குதலில் மர்மமான முறையில் பலியானவர்கள் ராணுவத்தால் விசாரணை நடத்துவதற்காக அழைத்துச் செல்லப்பட்டவர்களில் இருந்தனர் என அரசியல் கட்சிகள் குற்றம் சாட்டியது.
ஜம்மு காஷ்மீர் செய்தி தொடர்பு துறை தனது எக்ஸ் வலைதளத்தில், பூஞ்ச் மாவட்டத்தில் 3 பேர் உயிரிழந்ததாக தகவல் கிடைத்துள்ளது.
இது தொடர்பாக மருத்துவ மற்றும் சட்ட ரீதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது. மேலும் இழப்பீடு வாரிசுகளுக்கு பணி நியமனம் போன்றவை அளிக்க உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த பயங்கரவாதிகள் தாக்குதலில் ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். 2 பேர் படுகாயமடைந்தனர். இந்த பகுதிகளில் பயங்கரவாதிகளில் நடமாட்டம் அதிகமாக உள்ள பகுதிகளில் ராணுவ சோதனைகள் மேற்கொள்ளப்படுவதற்கு குறிப்பிடத்தக்கது.
English Summary
terrorists Attack killed heirs Government work