காஷ்மீரில் பயங்கரம்: கப்போர்டிற்குள் பதுங்கி இருந்த பயங்கரவாதிகள்..!! - Seithipunal
Seithipunal



ஜம்மு காஷ்மீரில் உள்ள குல்காம் மாவட்டத்தில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்புப் படையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அந்த பகுதி முழுவதும் பாதுகாப்பு படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்தனர். 

அப்போது ஜம்மு காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் உள்ள ஒரு வீட்டில் ஹிஸ்புல் முஜாகிதீன் அமைப்பைச் சேர்ந்த பயங்கரவாதிகள் பதுங்கி இருந்ததை பாதுகாப்புப் படையினர் கண்டறிந்துள்ளனர். இதையடுத்து பாதுகாப்புப் படையினரைக் கண்ட பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுட ஆரம்பித்துள்ளனர். 

இதனிடையே பாதுகாப்புப் படையினர் பதில் தாக்குதல் நடத்த தொடங்கியதில், இரு தரப்பினருக்கும் இடையே பயங்கர துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது. இந்த தாக்குதலில் காயமடைந்த பாதுகாப்புப் படையைச் சேர்ந்த ஒரு வீரர், மருத்துவமனையில் அனுமதிப்பட்டிருந்த நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். 

மேலும் மற்றொரு இடத்தில் நடந்த தாக்குதலிலும் பாதுகாப்பு படை வீரர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.  மேலும் தொடர்ந்து இரு பகுதிகளிலும் நடைபெற்ற தாக்குதலில் ஹிஸ்புல் முஜாகிதீன் அமைப்பைச் சேர்ந்த பயங்கரவாதிகள் 6 பேர் கொல்லப் பட்டனர். 

இந்நிலையில் இந்த பயங்கரவாதிகள் அனைவரும்  ஒரு வீட்டிற்குள் துணி வைக்கும் அலமாரிக்குப் பின்னால் ஒரு பதுங்குக் குழி அமைத்து அதில் பதுங்கி இருந்துள்ளனர். இது தொடர்பான செய்திகள், புகைப்படங்கள் தற்போது இணையத்தில் பரவி வருகின்றன. இந்த பயங்கரவாதிகள் அனைவரும் ஹிஸ்புல் முஜாகிதீன் அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Terrorists Lurking in Cupboard in a House in Kashmir


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->