திருமணமான மறு நாளே குழந்தையை பெற்ற மணமகள்- அதிர்ச்சியில் மணமகன்! - Seithipunal
Seithipunal


தெலுங்கானாவில் முதலிரவில் வயிறு வலிக்கிறது என கூறிய மணமகள் அடுத்த நாளே குழந்தையை பெற்றடுத்த சம்பவம் மணமகனை அதிர்ச்சி அடைய செய்து உள்ளது. தெலுங்கானாவில் செகந்திராபாத் நகரை சேர்ந்த பெண் ஒருவருக்கும், கிரேட்டர் நொய்டாவை சேர்ந்த ஆண் ஒருவருக்கும் திருமணம் செய்ய முடிவானது. கடந்த 26ம் தேதி அவர்களது திருமணம் நடந்து முடிந்தது.

இந்த மணமக்களின் முதலிரவன்று, மணமகள் வயிறு வலிக்கிறது என மணமகனிடம் கூறியுள்ளார். இதனால் பயந்து போன மணமகன், உடனடியாக அவரை அழைத்து கொண்டு அருகேயுள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார்.

அந்த மணமகளை பரிசோதனை செய்த மருத்துவர்கள், அந்த பெண் 7 மாத கர்ப்பிணியாக இருக்கிறார் என்று கணவர் மற்றும் அவரது உறவினர்களிடம் கூறியுள்ளனர். இதனை கேட்டு மணமகன் அதிர்ச்சி அடைந்து உள்ளார்.

அடுத்த நாள் அந்த மணமகளுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. மணமகளின் வீட்டாருக்கு அந்த பெண் கர்ப்பமாக இருப்பது முன்பே தெரிந்து உள்ளது. ஆனால் அவர்கள் மணமகன் வீட்டாரிடம் இதனை மறைத்து உள்ளனர்.

மணமகளுக்கு சமீபத்தில்  கல் நீக்க அறுவை சிகிச்சை நடந்தது என்றும் அதனால், அவரது வயிறு பெருத்துள்ளது எனவும் மணமகன் குடும்பத்தினரிடம் மணமகள் வீட்டார் கூறி ஏமாற்றியுள்ளனர்.

தகவலறிந்து வந்த மணமகள் குடும்பத்தினர் செகந்திராபாத்தில் இருந்து வந்து, பெண்ணையும் அவரது குழந்தையையும் அழைத்து கொண்டு சென்று விட்டனர். திருமணம் முடிந்த அடுத்த நாளே மணமகள் குழந்தை பெற்றடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

The bride gave birth to a child the day after the wedding the groom was shocked


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->