சி.பி.எஸ்.இ தொடர்பில் மாநில அரசின் அங்கீகாரம் ரத்து; மத்திய அரசு..!
The Central Government has revoked the State Governments recognition regarding CBSE
தனியார் சிபிஎஸ்இ பள்ளிகளுக்கு தடையில்லா சான்று வழங்கும் மாநில அரசின் அதிகாரத்தை மத்திய அரசு ரத்து செய்துள்ளது. அதன்படி, தனியார் சிபிஎஸ்இ பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்கும் நடைமுறையில் மத்திய அரசு மாற்றம் செய்துள்ளது.
தனியார் சிபிஎஸ்இ பள்ளிகளுக்கு அங்கீகாரம் பெற, மாநில அரசின் தடையில்லா சான்றை முதலில் பெற தேவையில்லை என்பது புதிய நடைமுறை ஆகும். இதற்கு அங்கீகாரம் கோரி நேரடியாக மத்திய அரசிடம் விண்ணப்பிக்கலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன், விண்ணப்பம் செய்யும் பள்ளிக்கு அங்கீகாரம் கொடுப்பதில் ஆட்சேபம் உள்ளதா ? என மாநில கல்வித்துறையிடம் மத்திய அரசு கருத்து கேட்கும் எனவும், ஆட்சேபனை தெரிவிக்காத பட்சத்தில் விண்ணப்பிக்கும் பள்ளிக்கு அனுமதி வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
English Summary
The Central Government has revoked the State Governments recognition regarding CBSE