மணிப்பூர் வன்முறைகளுக்காக பொதுமக்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்ட முதல்வர்..!
The Chief Minister has publicly apologized to the public for the violence in Manipur
மணிப்பூரில் கடந்த ஓராண்டுக்கும் மேலாக தொடரும் வன்முறை சம்பவங்களுக்காக அம்மாநில் முதல்வர் பைரேன்சிங் பொதுமக்களிடம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்டுக் கொண்டுள்ளார்.
அத்துடன் நடந்த அனைத்து சம்பவங்களையும் மறப்போம்; மன்னிப்போம் என்றும் அனைத்து இன மக்களும் ஒருங்கிணைந்து மாநிலத்தில் அமைதியை நிலை நாட்டுவோம் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மணிப்பூர் மாநிலத்தில் மைத்தேயி, குக்கி இன மக்களிடையே கடந்த ஓராண்டுக்கும் மேலாக வன்முறை சம்பவங்கள் தொடர்ந்தும் நடந்து வருகின்றனர்.
மைத்தேயி இனக் குழுவினரை பழங்குடிகள் பட்டியலில் சேர்த்து இடஒதுக்கீடு வழங்க குக்கி இன மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர் . இதனால் இரு இனங்களுக்கு இடையே பெரும் மோதல் வெடித்தது.
குறித்த மோதல்களில் 200க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். தற்போது வரை பல்லாயிரக்கணக்கான மக்கள் அகதிகளாக இடம் பெயர்ந்துள்ளமாய் குறிப்பிடத்தக்கடுகு.
இதனை தொடர்ந்து மணிப்பூர் குக்கி இன மக்கள் தங்களுக்கு தனி சுயாட்சி நிர்வாகப் பகுதி கோரி ஆயுதப் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இதனால் இன்னமும் மணிப்பூர் மாநிலம் பதற்றமான சூழ்நிலையில் இருக்கிறது. மணிப்பூரில் மத்தியில் ஆளும் பாஜக அரசு, வன்முறைகளை அடக்க தவறிவிட்டது என்று குற்றம்சாட்டி நாடாளுமன்றத்தை எதிர்க்கட்சிகள் முடக்கி இருந்தன.
மணிப்பூர் மாநிலத்துக்கு ஒரு முறை கூட பிரதமர் மோடி பயணம் செய்து மக்களுக்கு ஆறுதல் கூறவே இல்லை என்பது எதிர்க்கட்சிகளின் முக்கிய குற்றச்சாட்டாக இருக்கிறது.
குறித்த, மணிப்பூர் விவகாரத்தில் உச்சநீதிமன்றமும் தலையிட்டு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது. இருந்த போதும் மணிப்பூர் வன்முறைகள் ஓயவில்லை என்பது கவலையளிக்கிறது.
English Summary
The Chief Minister has publicly apologized to the public for the violence in Manipur