மீன் விற்க தடை விதித்த ஆட்சியர்! மறியலில் ஈடுபட்ட மீனவர்கள்! - Seithipunal
Seithipunal


துர்நாற்றம் மற்றும் சுகாதார சீக்கியர் ஏற்படுவதால் மீன் விற்பனை செய்ய தடை!

புதுச்சேரி பெரிய மார்க்கெட் பகுதி நேரு வீதியில் குபேர் மீன் அங்காடி செயல்பட்டு வருகிறது. நாள்தோறும் மீன்பிடித் துறைமுகங்களில் இருந்து வரும் மீன்களை அங்காடியின் முன் சாலையில் கொட்டி காலையில் ஏலம் விடுவதும் விற்பனை செய்வதும் நடைபெற்று வருகிறது. விற்பனை செய்யப்படும் மீன்களின் கழிவுகள் சாலையில் விட்டுச் செல்வதால் பிரதான வணிக சாலையான நேரு வீதியில் துர்நாற்றம் மற்றும் சுகாதாரக் சீர்கேடு ஏற்பட்டுள்ளது.

கிழக்கு கடற்கரைச் சாலையில் செயல்படும் நவீன மீன் அங்காடி மையத்திற்கு மீன் விற்பனை செய்ய இடம் மாற்றம் செய்யப்பட்டது. ஆனால் மீன் வியாபாரிகள் நவீன மீன் அங்காடி மையத்துக்கு செல்லாமல் நேரு வீதியிலேயே மீன் விற்பனை செய்து வருகின்றனர். 

இதன் காரணமாக புதுச்சேரி ஆட்சியர் உத்தரவின் பேரில் வரும் அக்டோபர் 1ம் தேதி முதல் பெரிய கடை பகுதியில் மீன் ஏலம் விட, மொத்த விற்பனை செய்ய, சாலையோரம் மீன் விற்க தடை செய்யப்பட்டது. மேலும் நகராட்சி பகுதியில் நிர்ணயம் செய்யப்பட்ட மீன் விற்பனை நிலையங்கள் மற்றும் சந்தைகளில் மட்டுமே மீன் விற்பனை செய்ய வேண்டும் என அறிவிக்கப்பட்டது.

புதுச்சேரி ஆட்சியரின் உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்த மீனவர்கள் இன்று காலை மீன் விற்பனையில் ஈடுபடாமல் பெரிய கடை பகுதியில் காந்தி வீதி மற்றும் நேரு வீதி சந்திப்பில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதனை அடுத்து அங்கு வந்த பெரிய கடை  போலீசார் சமாதானம் செய்து மாவட்ட ஆட்சியரிடம் பேச்சுவார்த்தை நடத்த உறுதி அளித்ததை அடுத்து மீனவர்கள் மற்றும் மீன் வியாபாரிகள் கலைந்து சென்றனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

The collector banned the sale of fish Fishermen on strike


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->