நாட்டின் சில்லறை பணவீக்கம் அதிரடியாக உயர்வு!...ரிசர்வ் வங்கியின் உச்ச வரம்பை தாண்டி அதிகரிப்பு! - Seithipunal
Seithipunal


ஒவ்வொரு மாதமும், நாட்டின் சில்லறை வர்த்தக பணவீக்கம் உயர்ந்தும், குறைந்தும் காணப்படும். அந்த வகையில், அக்டோபர் மாதத்திற்கான நாட்டின் சில்லறை வர்த்தக பணவீக்கம் 6.21 சதவீதமாக அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

மேலும்,  கடந்த செப்டம்பர் மாதத்தில்  5.49 சதவீதமாக இருந்த சில்லறை வர்த்தக பணவீக்கம் அக்டோபர் மாதத்தில் அதிகரித்துள்ள நிலையில், இது கடந்த 14 மாதங்களில் இல்லாத பணவீக்க உயர்வு என்ற தகவல் வெளியாகி உள்ளது.

குறிப்பாக, ரிசர்வ் வங்கியால் நிர்ணயிக்கப்பட்ட உச்ச வரம்பான 6 சதவீதத்தை தாண்டி, சில்லறை வர்த்தக பணவீக்கம் 6.21 சதவீதமாக அதிகரித்துள்ளது.

இதே போல், அக்டோபர் மாதத்தில் உணவுப்பொருட்கள் மீதான பண வீக்கம் 9.69 சதவீதமாக அதிகரித்துள்ளதாகவும், செப்டம்பர் மாதம் 9.24 சதவீதமாக இருந்த உணவுப்பொருட்கள் மீதான பண வீக்கம் தற்போது 9.69 சதவீதமாக அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் இந்த பண வீக்கத்திற்கு, காய், கனிகள் மற்றும் உணவு பொருட்களின் விலை உயர்வு தான் காரணம் என்று சொல்லப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

The country retail inflation is on the rise Increase beyond the maximum limit of rbi


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->