மாமியாரை கொள்ள விஷ மாத்திரை வேண்டும்; அதிரவைத்த மருமகள்; டாக்டர் ஷாக்..!
The daughter in law asked the doctor for poison pills to kill her mother in law
பெங்களூரு பெண் ஒருவர் மாமியாரை கொல்ல விஷம் கேட்ட நடவடிக்கையால் டாக்டர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
பெங்களூரு சஞ்சய் நகர் போலீஸ் ஸ்டேஷனில் டாக்டரும், சமூக ஆர்வலருமான சுனில்குமார் ஹெப்பி என்பவர் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது,தனது வாட்ஸ் அப்புக்கு கடந்த 17-ஆம் தேதி (பிப்ரவரி) சஹானா என்ற பெண் கன்னடத்தில் மெசேஜ் ஒன்றை அனுப்பி உள்ளார்.

தொடக்கத்தில் வெகு சாதாரணமாக உரையாடிய சஹானா, பின்னர் முக்கிய விஷயம் ஒன்றை கூற போவதாக தெரிவித்தார். மாமியாரை நான் கொல்ல வேண்டும், அதற்கு ஏதாவது விஷ மாத்திரையை பரிந்துரை செய்யுங்கள் என்று கேட்டுள்ளார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த டாக்டர் சுனில்குமார் ஹெப்பி, சஹானா கண்டித்து, இது மருத்துவ விதிகளுக்கு எதிரானது என்றும் கூறி உள்ளார். பின்னர் அவர் தொடர்பை துண்டித்துவிட. விடாமல் விஷ மாத்திரை பெயர்களை அனுப்புங்கள் என்று சஹானா தொந்தரவு செய்த படியே இருந்துள்ளார்.

டாக்டரின் புகார் மனுவை பெற்றுக் கொண்ட போலீசார், உறுதியான மற்றும் விரைவான நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளனர். சஹானா யார், உங்களுக்கு எப்படி தெரியும் என்று டாக்டரிடம் போலீசார் கேட்ட போது சமூக வலைதளங்களில் இருந்து செல்போன் எண்ணை எடுத்து இருக்கலாம், சமூக ஆர்வலர் என்பதால் அதற்கான வாய்ப்புகள் இருப்பதாக கூறியுள்ளார்.
குறித்த புகாரை பெற்றுக் கொண்ட போலீசார், சஹானா என்ற பெண் யார்? எதற்காக மாமியாரை கொல்ல விஷ மாத்திரைகள் கேட்டார்? அவர் எங்கு வசிக்கிறார்? உள்ளிட்ட விவரங்களை சேகரித்து வருவதாக தெரியவருகிறது.
English Summary
The daughter in law asked the doctor for poison pills to kill her mother in law