கிராமங்கள் முதல் நகரங்கள் வரை எதிலும் வளர்ச்சி - பிரதமர் மோடிக்கு முகேஷ் அம்பானி புகழாரம்
the diffetence between urban to rural has been narrowed with the vision of modi ji mukesh ambani praises
இந்தியாவில் பெரிய நகரங்களுக்கும் கிராமங்களுக்கும் இடையேயான இடைவெளி குறைந்து வருவதாக ரிலையன்ஸ் குழும தலைவர் முகேஷ் அம்பானி தெரிவித்துள்ளார்.
உத்திர பிரதேச தலைநகர் லக்னோவில் முதலீட்டாளர்களின் மாநாடு கடந்த மூன்று நாட்களாக நடைபெற்று வந்தது. இந்த மாநாட்டில் பாரதப் பிரதமர் திரு நரேந்திர மோடி உத்திர பிரதேச முதல்வர் யோகி அத்தியானந்த் உத்திரபிரதேச ஆளுநர் மற்றும் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜநாத் சிங் ஆகியோர் பங்கு பெற்றனர். மேலும் நாடெங்கிலும் உள்ள தொழிலதிபர்களும் முதலீட்டாளர்களும் இந்த மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றினர். இந்தியாவில் அதிக அளவிலான தொழில் முதலீடுகளை ஊக்குவிப்பதற்கும் நாட்டின் பொருளாதாரத்தை முன்னேற்ற பாதையில் அழைத்துச் செல்லும் நோக்குடன் இந்த மாநாடு நடைபெற்றது.
இந்த மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றிய ரிலையன்ஸ் குழும தலைவர் முகேஷ் அம்பானி பாரதப் பிரதமரின் சீடியை நிர்வாக திறமையாலும் வழிகாட்டுதலாலும் இந்தியா அபாரமான வளர்ச்சி பாதையில் சென்று கொண்டிருப்பதாக தெரிவித்தார். மேலும் பிரதமரின் தொலைநோக்கு திட்டங்களால் கிராமங்கள் மற்றும் நகரங்களுக்கு இடையேயான வித்தியாசம் வெகுவாக குறைந்து இருக்கிறது என சுட்டிக்காட்டினார். பெருநகரங்களில் கிடைப்பது போன்ற இணையதள வசதிகள் உட்பட அடிப்படை வசதிகள் தற்போது கிராமங்களிலும் கிடைக்கிறது இது இந்தியாவின் அபார வளர்ச்சி என குறிப்பிட்டார். இந்தியாவின் முன்னேற்றத்திற்கு நான்கு முக்கிய காரணங்களை பட்டியலிட்டு அவர் அதீத தொழில்நுட்ப வளர்ச்சி இந்தியாவில் இருக்கக்கூடிய அதிக இளைஞர்களின் தொகை பிராந்திய ஒற்றுமை மற்றும் மக்களின் நம்பிக்கை ஆகியவை இந்தியாவை முன்னேற்ற பாதையில் கொண்டு செல்லும் காரணிகளாக குறிப்பிட்டார்.
அதிவேக இணையதள சேவையான 5g இணையதள சேவை இந்தியாவில் தொடங்கியதிலிருந்து தொழில்துறை வளர்ச்சியில் இந்தியா முன்னேற்ற பாதையில் செல்கிறது என சுட்டிக்காட்டிய அவர் உத்திர பிரதேச மாநிலத்தில் மட்டும் 75,000 கோடி முதலீடு செய்து ஒரு லட்சத்திற்கு மேற்பட்ட வேலை வாய்ப்புகளை ஜியோ நிறுவனம் உருவாக்கி இருக்கிறது என்று தெரிவித்தார். மேலும் இந்த வருடத்தின் இறுதிக்குள் உத்தரப்பிரதேச மாநிலத்தின் கிராமங்கள் முதல் நகரங்கள் வரை அனைத்து பகுதிகளுக்கும் 5g அலைக்கற்றை சேவையை ஜியோ நிறுவனம் கொண்டு சேர்க்கும் என உறுதியளித்தார் முகேஷ் அம்பானி.
English Summary
the diffetence between urban to rural has been narrowed with the vision of modi ji mukesh ambani praises