மணிப்பூர் வன்முறையைக் கண்டித்து தீர்மானம் நிறைவேற்றிய ஐரோப்பா நாடாளுமன்றம்! - Seithipunal
Seithipunal


பிரதமர் நரேந்திர மோடி பிரான்ஸ் நாட்டுக்கு சென்றுள்ள நிலையில், ஐரோப்பா நாடாளுமன்றத்தில் மணிப்பூர் வன்முறையைக் கண்டித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. பாஜக ஆட்சி நடைபெற்று வரும் மணிப்பூரில் மைதேயி சமூகத்தினருக்கும், குகி பழங்குடியினருக்கும் இடையே கடந்த சில தினங்களுக்கு முன்பு பெரும் கலவரம் வெடித்தது.

2 மாதங்களாக நீடித்து வரும் இந்த கலவரத்தில் 140 க்கு மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளதாகவும், 5,000த்திற்கும் மேற்பட்ட வன்முறை சம்பவங்கள் நிகழ்ந்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. பிரதமர் மோடி 2 நாள் பயணமாக இன்று பிரான்ஸ் நாட்டிற்கு புறப்பட்டு சென்றுள்ளார். இந்நிலையில் ஐரோப்பிய நாடாளுமன்றம் சார்பில் மணிப்பூர் வன்முறையைக் கண்டித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

அந்த தீர்மானத்தில், “மணிப்பூரில் மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளது. ஏராளமானோர் உயிரிழந்துள்ளனர். இந்த வன்முறையில் பொது சொத்துகள் சேதப்படுத்தப்பட்டுள்ளது. அங்கு சிறுபான்மையின மக்கள், மனித உரிமை பாதுகாவலர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் தொடர்ந்து துன்புறுத்தப்பட்டு வருகின்றனர். அங்கு நடைபெறும் வன்முறை இன ரீதியாகவும், மத ரீதியாகவும் நடைபெறுகிறது. குறிப்பாக ஹிந்துக்கள் அதிகமுள்ள மைதேயி இனத்தினருக்கும், கிறிஸ்தவர்கள் அதிகமாக இருக்கும் குகி இன மக்களுக்கும் இடையே வன்முறை வெடித்துள்ளது.

மணிப்பூர் வன்முறையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிகள் கிடைக்கப் பெறுவதை இந்திய அரசு உறுதி செய்ய வேண்டும். கலவரம் தொடர்பாக விசாரணை நடத்தப்பட வேண்டும். சர்ச்சைக்குரிய விதத்தில் உள்ள ஆயுதப்படை சிறப்புச் சட்டம் திரும்ப பெறப்பட வேண்டும். அந்த மாநிலத்தில் மீண்டும் இணைய சேவையினை தொடங்க வேண்டும்” என்று அந்த தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

The European Parliament passed a resolution condemning the violence in Manipur


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->