இன்று திருமணம்... பெண்ணின் தந்தையை அடித்துக்கொன்ற முன்னாள் காதலன்...! கேரளாவில் அதிர்ச்சி...! - Seithipunal
Seithipunal


கேரள மாநிலத்தில் இன்று திருமணம் நடக்க இருந்த நிலையில் பெண்ணின் தந்தையை முன்னாள் காதலன் அடித்து கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே கல்லம்பலம் பகுதியை சேர்ந்தவர் ராஜு. இவரது மகள் ஸ்ரீலட்சுமிக்கும், பக்கத்து வீட்டை சேர்ந்த ஜிஷ்ணு என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து இந்த பழக்கம் காதலாக மாறி, இருவரும் காதலித்து வந்துள்ளனர். இதைத்தொடர்ந்து ஜிஷ்ணு, ஸ்ரீலட்சுமியின் தந்தை ராஜுவிடம் தனக்கு ஸ்ரீ லட்சுமியை திருமணம் செய்து தருமாறு கேட்டுள்ளார்.

ஆனால் அதற்கு மறுப்பு தெரிவித்த ஸ்ரீ லட்சுமியின் தந்தை, உடனடியாக ஸ்ரீ லட்சுமிக்கு வேறு ஒரு இடத்தில் மாப்பிள்ளை பார்த்து திருமண ஏற்பாடுகள் செய்துள்ளார். இந்நிலையில் ஸ்ரீ லட்சுமிக்கு இன்று திருமணம் நடக்க இருந்தது. இதனால் ஆத்திரமடைந்த ஜிஷ்ணு, நேற்று தனது நண்பர்களுடன் ஸ்ரீ லட்சுமியின் வீட்டிற்குச் சென்று தந்தை ராஜுவை சரமாரியாக தாக்கியுள்ளனர். இதில் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் ராஜு கீழே சரிந்தார். இதைத்தொடர்ந்து ஜிஷ்ணு உட்பட அவரது நண்பர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.

இந்நிலையில் உறவினர்கள் ராஜுவை மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு பரிசோதனை செய்த மருத்துவர் ராஜு வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளார். இதைத்தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் ஜிஷ்ணு உட்பட நான்கு பேரை கைது செய்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

The ex boyfriend who beat up the woman father and death in kerala


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->