சிறுமியை டியூசன் சென்டரில் 03 ஆண்டுகளாக ஆசிரியரே சீரழித்த கொடூரம்..! கைது செய்த போலீசார்..!
The girl was kept in the tutoring center and the teacher was abused for 3 years
15 வயது சிறுமியை 03 ஆண்டாக பாலியல் வன்கொடுமை செய்த டியூசன் ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார். டில்லியின் தெற்கு பகுதியில் சிஆர் பூங்கா பகுதியில் வசிக்கும் ஆசிரியர் ஒருவர் மாணவர்களுக்கு டியூசன் எடுத்து வந்துள்ளார்.
மேற்கு வங்கத்தைச் சேர்ந்த இவரிடம் சிறுமி ஒருவர் டியூசன் படித்து சென்றுள்ளார். கடந்த 2022-ஆம் ஆண்டு முதல் சிறுமியை அந்த ஆசிரியர் மன ரீதியாக துன்புறுத்தியுள்ளார். அத்துடன், டியூசன் மையத்திலேயே பல முறை குறித்த சிறுமியை பாலியல் வன் கொடுமை செய்துள்ளதாக கூறப்படுகிறது.

அதனை சிறுமி வெளியில் சொல்லக்கூடாது என மிரட்டல் விடுத்துள்ளார். இதனால் பயந்து போன அந்த சிறுமி விஷயத்தை வெளியில் யாரிடமும் சொல்லவில்லை என கூறப்படுகிறது.
தற்போது 15 வயதாகும் அந்த சிறுமி தந்தையுடன் சென்று அப்பகுதி போலீசில் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில், குறித்த டியூசன் ஆசிரியரை போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, போலீசார் கைது செய்துள்ளனர். தற்போது அந்த ஆசிரியரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
English Summary
The girl was kept in the tutoring center and the teacher was abused for 3 years