ஓட்டலின் மேற்கூரை இடிந்து விழுந்து 5 பேர் பலி! போலீசார் தீவிர விசாரணை! - Seithipunal
Seithipunal


மத்திய பிரதேசம் இந்தூர் மாவட்டத்திலிருந்து 40 கி.மீ. தொலைவில் உள்ள சோரல் கிராமத்தில் ஒரு தனியார் ஓட்டலில் கட்டுமான பணி நடைபெற்று வந்ததுள்ளது. நேற்று இரவு வழக்கம்போல  பணி முடிந்து தொழிலாளர்கள் அங்கு உறங்கி கொண்டிருந்தனர். அப்பொழுது திடீரென ஓட்டலின் மேற்கூரை இடிந்து விழுந்தது.

இந்த விபத்தில் உறங்கி கொண்டிருந்த 5 தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்த சம்பவம் குறித்து காலை 6.30 மணியளவில் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. 

இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் பற்றி வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதுதொடர்பாக இந்தூர் காவல் கண்காணிப்பாளர் ஹித்திகா வாசல் கூறுகையில், "காலையில் வேலைக்கு வந்த தொழிலாளர்கள் மூலம் இரவு நடந்த இந்த விபத்து குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்த விபத்தில் உயிரிழந்த 5 தொழிலாளர்களின் உடல்கள் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது" என்றார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

The roof of the hotel collapsed and 5 people were killed


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->