போலீசாருக்கு கொலை மிரட்டல் விடுத்த ரவுடி! - Seithipunal
Seithipunal


ரெட்டிச்சாவடி போலீசாரை மிரட்டிய புதுச்சேரி ரவுடி,  மடக்கிப் பிடித்து குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டார்.

புதுச்சேரி அடுத்த கரிக்கலாம்பாக்கம் குளத்துமேட்டுத் தெருவைச் சேர்ந்த சேகர் மகன் விநாயகமூர்த்தி (34); ரவுடி. கடந்த 5ம் தேதி கரிக்கன்நகர் மலட்டாறு பாலம் அருகே, அவ்வழியாக செல்வோரை கத்தியை காட்டி இவர் மிரட்டி பணம் பறித்துள்ளார்.

இதுகுறித்து தகவல் அறிந்த  ரெட்டிச்சாவடி போலீசார் விரைந்து சென்று, ரவுடி விநாயகமூர்த்தியை மடக்கிப் பிடித்தனர். அப்போது, ரவுடி விநாயகமூர்த்தி போலீசாருக்கு கொலை மிரட்டல் விடுத்தார்.

ரெட்டிச்சாவடி போலீசார் இதுகுறித்து வழக்கு பதித்து, விநாயகமூர்த்தியை கைது செய்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இவர் மீது ரெட்டிச்சாவடி, துாக்கணாம்பாக்கம் மற்றும் புதுச்சேரி மாநிலம் மங்கலம் போலீஸ் ஸ்டேஷன்களில் கொலை, கொள்ளை மற்றும் வெடிக்குண்டு வீசியது உள்ளிட்ட 17 வழக்குகள் குவிந்து உள்ளன.

இந்நிலையில், இவரது குற்ற நடவடிக்கைகளை தடுக்கும் வகையில், எஸ்.பி., ராஜாராம் பரிந்துரையை ஏற்று, ரவுடி விநாயகமூர்த்தியை குண்டர் சட்டத்தில் ஓராண்டு சிறையில் அடைக்க கலெக்டர் சிபி ஆதித்தியா செந்தில்குமார் உத்தரவிட்டார். இந்த உத்தரவு நகலை நேற்று ரெட்டிச்சாவடி போலீசார் கடலுார் சிறையில் உள்ள விநாயகமூர்த்தியிடம் வழங்கினர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

The rowdy threatened to kill the police


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->