ஜம்மு-காஷ்மீரில் நீடிக்கும் திக் திக் நிமிடங்கள்!...பயங்கரவாதிகள் தாக்குதலுக்கு போலீசார் பலி! - Seithipunal
Seithipunal


ஜம்மு-காஷ்மீரில் மொத்தமுள்ள 90 தொகுதிகளில் முதற்கட்டமாக 24 தொகுதிகளுக்கு முதல் கட்ட சட்டசபை தேர்தல் கடந்த 18-ம் தேதி  நடைபெற்றது.

பின்னர்  2-ம் கட்ட சட்ட சபை தேர்தல் கடந்த 25-ம் தேதி தொடங்கிய நிலையில்,  ஜம்முவில் 11 தொகுதிகள், காஷ்மீரில் 15 தொகுதிகள் என மொத்தம் 26 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்று முடிந்துள்ள நிலையில், 3ம் கட்ட தேர்தல் வரும் 1-ம் தேதி நடைபெறுகிறது.

இதற்கிடையே ஜம்மு-காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் உள்ள  தேவ்சார் பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவலின் பேரில், பாதுகாப்பு படையினர் நேற்று  தீவிர தேடுதலில் ஈடுபட்டனர். அப்போது துப்பாக்கி சண்டை மோதலில், பாதுகாப்பு படை வீரர்கள் 4 பேர் காயமடைந்ததாக தகவல் வெளியானது.

இந்நிலையில், ஜம்முவின் கதுவா மாவட்டம் கோக் மண்ட்லி பகுதியில் பங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு நேற்று ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் அவர்களை தேடிய போது, அங்கு பதுங்கி இருந்த பயங்கரவாதிகள் போலீசார் மீது  நடத்திய தாக்குதலில் 2 பேர் போலீசார் உயிரிழந்துள்ளனர்.

மேலும், 2 போலீசார் படுகாயமடைந்ததாக தகவல் வெளியாகி உள்ள நிலையில், அப்பகுதியில் பாதுகாப்புப்படையினர் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கி சண்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

The shocking minutes continued in jammu kashmir terrorist attack kills police


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->