'அறநெறி மற்றும் கண்ணியத்துடன் நிகழ்ச்சி நடத்த வேண்டும்'; சர்ச்சை யூடியூபர் ரன்வீர் அல்லாபாடியாவுக்கு, உச்ச நீதிமன்றம் கண்டிப்பு..!
The show should be conducted with morality and dignity Supreme Court reprimands controversial YouTuber Ranveer Allahbadia
'இந்தியாஸ் காட் லேட்டன்ட்' என்ற நிகழ்ச்சியில் அல்லாபாடியாவின் ஆபாசமான கருத்துக்களைத் பகிர்ந்து கொண்டதற்காக ரன்வீர் அல்லாபாடியா என்ற பிரபல யூடியூபர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
அதனை தொடர்ந்து, பிப்ரவரி 18 அன்று உச்ச நீதிமன்றம் அவர் எந்த நிகழ்ச்சியையும் ஒளிபரப்ப கூடாது என்று தடை விதித்ததோடு, அதே நேரத்தில் மஹாராஷ்டிரா, ராஜஸ்தான் மற்றும் அசாம் காவல்துறையால் தாக்கல் செய்யப்பட்ட பல எப்.ஐ.ஆர். களின் அடிப்படையில் கைது செய்யப்படுவதிலிருந்து இடைக்கால பாதுகாப்பை வழங்கியது.

இந்நிலையில், யூடியூபர் ரன்வீர் அல்லாபாடியாவை உச்ச நீதிமன்றம் கடுமையாக கடித்துள்ளதோடு, மீண்டும் அவர் நிகழ்ச்சிகளை ஒளிபரப்பு செய்ய அனுமதி அளித்துள்ளது. அத்துடன், இந்த வழக்கில் அறநெறி மற்றும் கண்ணியத்திற்கு உட்பட்டு தனது நிகழ்ச்சிகளை நடத்த அவருக்கு சுதந்திரம் இருப்பதாக உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.
இந்த வழக்கு தொடர்பில் நீதிபதிகள் கூறியதாவது: பல ஊழியர்கள் இருப்பதாக அவர் கூறுகிறார், எனவே, வாழ்வாதாரம் கேள்விக்குறியாக உள்ள குடும்பங்கள் உள்ளன. ஒழுக்கத்தையும, கண்ணியத்தையும் பேணுவதற்கு உட்பட்டு, அவர் ஒரு நிகழ்ச்சியை நடத்த விரும்பினால், அவரால் முடியும் என்றும், பேச்சு சுதந்திரத்திற்கு வரம்புகள் உள்ளன.

ஆபாசமான மொழியைப் பயன்படுத்துவது நகைச்சுவை அல்ல. அடிப்படை உரிமைகளை அனுபவிப்பதற்கான உத்தரவாதத்தை நாடு வழங்குகிறது, ஆனால் சில கடமைகளும் உள்ளன என்று தெரிவித்துள்ளனர்.
அத்துடன், தீர்ப்பின் போது, நிகழ்ச்சியில் ஆபாசமாக பேசியதற்கு ரன்வீர் அல்லாபாடியாவுக்கு கடுமையான கண்டனமும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். மேலும், ஆன்லைன் ஊடக உள்ளடக்கத்தை ஒழுங்குபடுத்துவதற்கான விதிகள் மற்றும் வழிகாட்டுதல்களின் தொகுப்பை வரைவு செய்யுமாறு மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் அறிவுரையும் வழங்கியுள்ளது.
English Summary
The show should be conducted with morality and dignity Supreme Court reprimands controversial YouTuber Ranveer Allahbadia