திருப்பதியில் தெப்பல் உற்சவம்; 100 சைக்கிள்களை காணிக்கையாக வழங்கிய சென்னையை சேர்ந்த தனியார் நிறுவனம்..! - Seithipunal
Seithipunal


சென்னையைச் சேர்ந்த முருகப்பா குரூப் டிஐ சைக்கிள்ஸ் ஆஃப் இந்தியா நிறுவனம்  100 சைக்கிள்களை திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு காணிக்கையாக வழங்கி உள்ளது. குறித்த சைக்கிள்களை கோவில் முன்னால் நிறுத்தி அர்ச்சகர்கள் சிறப்புப்பூஜைகள் செய்துள்ளனர்.

ஏழுமலையான் கோவிலுக்கு காணிக்கையாக சைக்கிள்களை தனியார் நிறுவன பிரதிநிதிகள் வழங்க, அவைகளை கோவில் துணை அதிகாரி லோகநாதன் பெற்றுக் கொண்டார். அத்துடன், அந்தத் தனியார் நிறுவன பிரநிதிகளுக்கு கோவிலில் சாமி தரிசன ஏற்பாடுகளை அதிகாரிகள் செய்து வைத்துள்ளனர்.

திருமலை திருப்பதி வெங்கடாஜலபதியை தரிசனம் செய்ய தினந்தோறும் ஆயிரக்கணக்கானோர் வழிபடுகிறார்கள். அது போல் பண்டிகை காலங்களில் லட்சக்கணக்கானோர் வருகை தருகிறார்கள். எந்த நேரத்திலும் ஏழுமலையானை ஏராளமான பக்தர்கள் தரிசித்து வருவதால் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது.

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஆண்டுதோறும் நடக்கும் 03 நாட்கள் வசந்த உற்சவம் மற்றும், 05 நாள் வருடாந்திர தெப்பல் உற்சவம் நேற்று முன் தினம் தொடங்கியது. இரண்டாம் நாளான நேற்றிரவு ருக்மணி சமேத கிருஷ்ணர் அருள்பாலிக்கின்றனர். திருப்பதி ஏழுமலையான் கோயில் புஷ்கரணியில் (குளம்) ஆண்டுதோறும் மாசி மாத பவுர்ணமி முன்னிட்டு 05 நாட்கள் வருடாந்திர தெப்பல் உற்சவம் நடப்பது வழக்கம். அத்துடன் பங்குனி உத்தர நாளான இன்று அங்கு பக்தர்கள் கூட்டம் அலை  மோதுகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Theppal Utsavam in Tirupati Chennai based private company donated 100 bicycles


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->