அமெரிக்காவில் இருந்து இந்தியர்களுடன் 3-வது விமானம் அமிர்தசரஸ் வந்தது!
Third flight carrying Indians from US arrives in Amritsar
அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்பட்ட 112 இந்தியர்களுடன் 3 வது விமானம் அமிர்தசரஸ் வந்தடைந்தது .இதையடுத்து குடியேற்ற விதிகள் மற்றும் ஆவணங்கள் சரிபார்ப்புக்கு பிறகு நாடு கடத்தப்பட்ட இந்தியர்கள் அவரவர் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
அமெரிக்க அதிபராக இரண்டாவது முறையாக பொறுப்பேற்றதும் மெக்சிகோ, கனடா மற்றும் சீன பொருட்களுக்கு அதிக வரி விதிக்கும் நடைமுறையை டொனால்டு டிரம்ப் அறிவித்தார். முன்னதாக அமெரிக்காவில் சட்ட விரோதமாக குடியேறியவர்களை நாடு கடத்தப்படுவர்ர்கள் என முக்கிய அறிவிப்பை வெளியிட்டார்.அந்தவகையில் அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறிய 104 இந்தியர்கள் கடந்த வாரம் ராணுவ விமானத்தில் இந்தியாவுக்கு திருப்பி அனுப்பப்பட்டனர்.
மேலும் அவர்கள் பிப்ரவரி 5-ம் தேதி பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் வந்தடைந்தனர்.இதில் அரியானா, குஜராத் மாநிலங்களைச் சேர்ந்த தலா 33 பேர், மற்றும் பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த 30 பேர், மகாராஷ்டிரா, உத்தர பிரதேச மாநிலங்களைச் சேர்ந்த தலா 3 பேர், சண்டிகரைச் சேரந்த 2 பேர் என அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்பட்டனர். அப்போது அவர்களை கை மற்றும் காலில் விலங்கிட்டு விமானத்தில் அனுப்பி வைத்தது கடும் விமர்சனத்தை ஏற்படுத்தியது.
இதையடுத்து இந்த நிலையில் சட்டவிரோதமாக குடியேறிய இந்தியர்களை நாடு கடத்தும் நடவடிக்கையில் 2-வது கட்டமாக மேலும் 119 பேர் இந்தியாவுக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர். இவர்கள் நேற்று முன்தினம் நள்ளிரவு அமிர்தசரஸ் வந்தடைந்தனர்.
இந்த நிலையில், அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்பட்ட மேலும் 112 இந்தியர்களுடன் மூன்றாவது விமானம் இன்று இரவு 10 மணியளவில் அமிர்தசரஸ் வந்தது என தெரிவிக்கப்பட்டுள்ளது . மேலும் இந்த விமானத்தில் பஞ்சாப்பை சேர்ந்த 31 பேரும் , ஹரியானாவை சேர்ந்த 44 பேரும் , குஜராத்தை சேர்ந்த 33 பேர் , உத்தர பிரதேசம் 2, ஹிமாசல பிரதேசம் மற்றும் உத்தரகாண்டை சேர்ந்த தலா ஒருவர் வந்துள்ளனர் என தெரிவிக்கப்படுள்ளது. இதையடுத்து குடியேற்ற விதிகள் மற்றும் ஆவணங்கள் சரிபார்ப்புக்கு பிறகு நாடு கடத்தப்பட்ட இந்தியர்கள் அவரவர் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
English Summary
Third flight carrying Indians from US arrives in Amritsar