திருப்பதி ஏழுமலையான் சாமி தரிசனம்.. அக்டோபர், நவம்பர் மாதத்திற்கான ஆன்லைன் டிக்கெட் வெளியீடு.! - Seithipunal
Seithipunal


திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்ய நவம்பர் மாதத்திற்கான ஆன்லைன் டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளது.

திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் காத்திருக்காமல் ஆன்லைன் மூலம் டிக்கெட் பெறும் வசதி சமீபத்தில் தொடங்கப்பட்டது.

இதன் மூலம் தினமும் 20 ஆயிரம் பக்தர்கள் என ஒரு மாதத்திற்கு 6 லட்சம் பக்தர்களுக்கு முன்பதிவு செய்ய அனுமதிக்கப்படுகிறது. இந்த நிலையில் நவம்பர் மாதம் 6 லட்சம் பக்தர்களுக்கான தரிசன டிக்கெட் நேற்று காலை 9 மணிக்கு வெளியிடப்பட்டது.

மேலும், 300 ரூபாய் தரிசன டிக்கெட் மற்றும் ஆர்ஜித சேவை கல்யாண உற்சவம் உள்பட அனைத்து டிக்கெட்டுகளும் இன்று வெளியிடப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது

மேலும், அக்டோபர் மாதத்திற்கான அங்கப்பிரதட்சனம் டிக்கெட்டுக்களும் இன்று காலை 9 மணிக்கு வெளியிடப்பட உள்ளதாக திருப்பதி தேவஸ்தானம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Thirupati Dharshan online ticket booking


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->