திருவனந்தபுரத்தில் இவர்தான் போட்டியிட வேண்டும்..! மனம் திறந்த பிரபல நடிகர்! - Seithipunal
Seithipunal


மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் கேரள மாநிலத்தின் இடதுசாரி ஜனநாயக முன்னணி காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி கட்சிகள், பாரதிய ஜனதா கட்சி போன்றவை தேர்தல் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. 

பாரதிய ஜனதா கட்சி சார்பில் திருவனந்தபுரம் தொகுதியில் நடிகை சோபனா, மத்திய மந்திரி ராஜுவ் சந்திரசேகர், சினிமா தயாரிப்பாளர் சுரேஷ்குமார் ஆகியோரில் ஒருவர் போட்டியிட போவதாக தகவல் வெளியானது. 

இந்நிலையில் திருவனந்தபுரம் தொகுதியில் பாரதிய ஜனதா கட்சி வேட்பாளராக நடிகை ஷோபனா போட்டியிட வேண்டும் என நடிகர் சுரேஷ் கோபி தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக அவர் தெரிவித்திருப்பதாவது, நடிகை ஷோபனா வருங்கால அரசியல்வாதி. வருகின்ற மக்களவைத் தேர்தலில் ஷோபனா திருவனந்தபுரம் தொகுதியில் போட்டியிட வேண்டும் என்பதே எனது விருப்பம். 

நானும் பாரதிய ஜனதா கட்சியின் மத்திய தலைமையும் இது குறித்து அவருடன் பேசினோம் என தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Thiruvananthapuram contest issue


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->