புனே மாவட்டம்! அணையில் குளிக்கச் சென்ற பெண்கள் உட்பட 8 பேர் உயிரிழப்பு.! - Seithipunal
Seithipunal


புனே மாவட்டத்தில் அணையில் குளிக்க சென்ற பெண்கள் உட்பட 8 பேர் உயிரிழந்து உள்ளனர்.

மகாராஷ்டிரா மாநிலம் புனே மாவட்டத்தில் உள்ள நரிஹான் கிராமத்தை சேர்ந்தவர்கள் அப்பகுதியில் உள்ள பஹதர் அணையில் குளிப்பதற்காக சில பெண்கள் சென்றுள்ளனர்.

அவர்கள் அணையில் குளித்துக் கொண்டிருக்கும் போது தண்ணீரின் வேகம் அதிகரித்ததால் 5 பெண்கள் நீரில் மூழ்கி, தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த மீட்பு குழுவினர் தண்ணீரில் அடித்து செல்லப்பட்ட பெண்களை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டிருந்தனர். கடும் போராட்டத்திற்கு பின்பு தண்ணீரில் அடித்து செல்லப்பட்டவர்களில் 4 பெண்கள் சடலமாக மீட்கப்பட்ட இந்நிலையில் இன்னும் ஒரு பெண்ணை தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதைத் தொடர்ந்து புனேவில் உள்ள சாஸ்காமான் அணைக்கு குளிக்கச் சென்ற மாணவர்களில் 4 பேர் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்து உள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Those who went to bathe in the dam drowned


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->