அதிரடி காட்டிய லஞ்ச ஒழிப்புத் துறை - நகராட்சி அலுவலர் வீட்டில் 3 கோடி பறிமுதல்.! - Seithipunal
Seithipunal


தெலுங்கானா மாநிலத்தில் உள்ள நிஜாமாபாத் நகராட்சியில் வருவாய் துறை அதிகாரியாக பணியாற்றி வந்த நரேந்தர் என்பவர் வருமானத்திற்கு அதிகமாக சொத்துக்களை குவித்ததாக புகார்கள் வந்தன. 

இந்தப் புகாரின் படி, நிஜாமாபாத் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் நேற்று அதிகாலை நரேந்தர் வீட்டிலும், நிஜாமாபாத் நகராட்சி அலுவலகத்திலும், நரேந்தரின் உறவினர்கள் வீடுகளிலும் அதிரடி சோதனை மேற்கொண்டனர். 

அந்த சோதனையில், வருவாய்க்கு அதிகமாக நரேந்தர் சொத்துகள் சேர்த்துள்ள விவரம் தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து நரேந்தரின் வீட்டில் ரூ.2.93 கோடி ரொக்கம், ரூ.1.98 கோடிமதிப்புள்ள 17 வீட்டு மனைப்பட்டாக்கள் அவரது மனைவியின் வங்கி கணக்கில் ரூ.1.10 கோடியும், லாக்கரில் தங்க நகைகளையும் லஞ்ச ஒழிப்பு துறையினர் பறிமுதல் செய்தனர். 

பின்னர் இந்த சம்பவம் தொடர்பாக நரேந்தரை லஞ்ச ஒழிப்புதுறை அதிகாரிகள் கைது செய்தனர். நகராட்சி அதிகாரி வீட்டில் இவ்வளவு தொகை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

three crores money seized in telangana muncipal officer


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->