சாமி கும்பிட போன சிறுமிகள்.! குளத்தில் விழுந்து உயிரிழந்த சம்பவம்.! - Seithipunal
Seithipunal


வேலூர் மாவட்டத்தில் அரவட்லா பகுதியை சேர்ந்த சுப்பிரமணியம் மற்றும் அவரது மகள் பவ்யா, மணிமேகலை மற்றும் அவரது மகள் மவுனிகா உள்ளிட்டோர் ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் உள்ள தனது உறவினர் கதிரப்பா வீட்டிற்குச் சென்றுள்ளனர்.

அதன் பின்னர் அவர்கள் இருவரும் உறவினர்களுடன் சேர்ந்து நேற்று காலை பைரெட்டி பள்ளி அருகே உள்ள நிகி தேவாடி காலபைரவர் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்வதற்குச் சென்றனர். இதையடுத்து கதிரப்பா தன் உறவினர்களுடன் கோவிலில் பூஜை செய்து கொண்டு இருந்தனர். 

அந்த நேரத்தில் கதிரைப்ப மகள் உள்பட மூன்று சிறுமிகளும் கோவில் குளத்தின் அருகே விளையாடிக் கொண்டு இருந்தபோது திடீரென தவறி குளத்தில் விழுந்துள்ளனர். மேலும், தங்களை காப்பாற்றும்படி கத்தி கூச்சலிட்டனர். 

இந்த சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி போய் சிறுமிகளை மீட்பதற்கான முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால், அதற்குள் மூன்று சிறுமிகளும் தண்ணீரில் மூழ்கியுள்ளனர். இதைத் தொடர்ந்து அங்கிருந்தவர் குளத்தில் இறங்கி சிறுமிகளை தேடி அவர்களின் உடல்களை மீட்டனர். 

இது குறித்து தகவலறிந்து வந்த போலீசார் சிறுமிகளின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

three girls died after fell down temple pool in andira


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->