இல்லத்தரசிகளே உஷார்! கியாஸ் சிலிண்டர் வெடித்து சிதறி 3 பேர் பலி! - Seithipunal
Seithipunal


ஆந்திராவில் கேயாஸ் சிலிண்டர் வெடித்து சிதறி மூன்று பேர் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

ஆந்திரா மாநிலம் அன்னமய்யா மாவட்டம் கொத்தப்பேட்டையில்  மூதாட்டி ஒருவர் அவரது இரண்டு பேத்திகள் என மூன்று பேரும் தனியாக வசித்து வருவதாக கூறப்படுகிறது.

இந்தநிலையில் நேற்று இரவு சமையல் செய்து முடித்துவிட்டு  கேயாஸ் சிலிண்டரை சரியாக மூடாததால் இரவு முழுவதும் கியாஸ் கசிந்து வீடு முழுவதும் பரவி இருந்ததாக கூறப்படுகிறது.

அதனை அறியாத மூதாட்டி குழந்தைகளுக்கு பால் காய்ச்சுவதற்காக கேஸ் அடுப்பை பற்ற வைத்ததாக கூறப்படுகிறது. அப்போது கேயாஸ் சிலிண்டர் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

சிலிண்டர் வெடிப்பு சம்பவத்தில் சிக்கிய மூதாட்டி மற்றும் அவரது இரண்டு பேத்திகள் பரிதாபமாக சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.

கேயாஸ் சிலிண்டர் வெடித்ததில் வீட்டின் சுவர்களில் விரிசல் விழுந்தது மட்டுமல்லாமல் கியாஸ் சிலிண்டர் வெடிக்கும் சத்தத்தை கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து பார்த்தபோது மூதாட்டி அவரது இரண்டு பேத்தியும் இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

பின்னர் இந்த சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தகவல் அறிந்து அங்கு வந்த போலீசார் இறந்து கிடந்தவர்களின் பிணங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அங்குள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததாக கூறப்படுகிறது.

மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஆந்திராவில் கேயாஸ் சிலிண்டர் வெடித்து சிதறியதால் மூன்று பேர் சம்பவ இடத்திலேயே பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Three killed in Chaos cylinder blast in Andhra Pradesh


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->