மும்மொழி கொள்கை விவகாரம்: சுப்ரீம் கோர்ட்டில் பா.ஜ.க. வழக்கறிஞர் பொதுநல மனு தாக்கல்!
Three-language policy: BJP moves Supreme Court By PTI . Lawyer files PIL
மும்மொழி கொள்கை விவகாரம் தொடர்பாக பா.ஜ.க. வழக்கறிஞர் ஜி.எஸ்.மணி சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.இந்த மனு சுப்ரீம் கோர்ட்டில் விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவில் அதிகரித்துள்ள மக்கள்தொகைக்கு ஏற்ப அடுத்த ஆண்டு 2026 நாடாளுமன்ற தொகுதிகள் மறுசீரமைப்பு செய்யப்பட இருக்கின்றன.மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய கல்வி கொள்கை 2020-ன் படி மும்மொழி பாடத்திட்ட கொள்கையை அனைத்து மாநில அரசுகளும் ஏற்று அமல்படுத்தி வருகிறது.ஆனால் தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்கள் மும்மொழி கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.இதையடுத்து இது மக்கள்தொகை உயர்வை கட்டுப்பாட்டில் வைத்துள்ள தமிழகத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் மொத்தம் உள்ள 39 தொகுதிகள் 31 ஆக குறைய வாய்ப்பு இருப்பதாக தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏற்கனவே சுட்டிக்காட்டி இருந்தார்.
இந்நிலையில், இதுதொடர்பாக பா.ஜ.க. வழக்கறிஞர் ஜி.எஸ்.மணி சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் அவர் கூறியுள்ளதாவது:தேசிய கல்வி கொள்கை என்பது அனைத்து தரப்பு மாணவர்களின் பள்ளி கல்வித்தரத்தை மேம்படுத்தவும், அனைத்து இந்திய மொழிகளையும் ஏழை எளிய பட்டியல், பழங்குடியின, பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினைச் சார்ந்த பள்ளி குழந்தைகள் இலவசமாக கற்கவேண்டும் என்ற நோக்கத்தோடு ஒன்றிய அரசால் கொண்டு வரப்பட்ட கல்விக் கொள்கை திட்டம் என குறிப்பிட்டுள்ளார்.
மேலும் இதனை அரசியல் காரணங்களுக்காக தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்காளம் உள்ளிட்ட மாநில அரசுகள் ஏற்க மறுக்கின்றன என்றும் மத்திய அரசு கொண்டுவரும் சட்ட திட்டம் அனைத்து மாநில அரசுகளுக்கும் பொருந்துவது என்பது மட்டுமின்றி, அத்தகைய கொள்கையை அமல்படுத்த வேண்டியது மாநில அரசின் கடமையாகும் என்றும் இலவச கல்வி என்பது அரசியலமைப்பு கொடுத்துள்ள அடிப்படை உரிமை. இந்தத் திட்டத்தை ஏற்க மறுப்பதினால் மாநில அரசு, சம்பந்தப்பட்ட பள்ளி குழந்தைகளின் அடிப்படை உரிமையான இலவச கல்வியை மறுக்கும் செயல் என அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மனு சுப்ரீம் கோர்ட்டில் விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.https://www.facebook.com/plugins/video.php?height=476&href=https%3A%2F%2Fwww.facebook.com%2Fseithipunal%2Fvideos%2F1406588954047975%2F&show_text=true&width=476&t=0
English Summary
Three-language policy: BJP moves Supreme Court By PTI . Lawyer files PIL