சாம்பியன் டிராபி 2025; மெரினா, பெசன்ட்நகர் கடற்கரையில் திரையிடப்படும் இந்தியா, நியூசிலாந்து இடையிலான இறுதி போட்டி..! - Seithipunal
Seithipunal


09-வது ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இறுதி போட்டி இன்று டுபாயில் நடைபெறவுள்ளது. இதில் இந்தியா, நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. இதுவரை இந்த தொடரில் தோல்வியை சந்திக்காத இந்திய அணி கோப்பையை வெல்லும் என எதிர் பார்க்கப்படுகிறது. இந்நிலையில், இந்த ஆட்டம் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது.

அத்துடன் இந்தப் போட்டியில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வெல்ல இரு அணிகளும் கடுமையாகப் போராடும் என்பதால் இந்த ஆட்டம் மிகுந்த ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த சாம்பியன்ஸ் கோப்பை தொடரின் இறுதிப்போட்டியை சென்னையில் இரண்டு இடங்களில் திரையிட உள்ளதாக தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் தெரிவித்துள்ளது.

அந்தவகையில், 02:30 மணிக்கு இந்த போட்டி மெரினா கடற்கரை (விவேகானந்தா மாளிகைக்கு எதிரே) மற்றும் பெசன்ட்நகர் கடற்கரை (போலீஸ் பூத் அருகில்) ஆகிய இரு இடங்களில் திரையிடப்படவுள்ளது.

இந்த நிகழ்வில் பொதுமக்கள் தங்களது குடும்பத்தினருடனும், நண்பர்களுடனும் போட்டியைக் கண்டு ரசிக்குமாறு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் கேட்டுக்கொண்டுள்ளது. இதற்கு முன், சாம்பியன்ஸ் கோப்பை தொடரின் லீக் தொடரில் இந்தியா, பாகிஸ்தான் போட்டி மெரினா, பெசன்ட்நகர் கடற்கரையில் திரையிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Champions Trophy Final match between India and New Zealand to be screened at Marina and Besant nagar beach


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->