இன்று வரலாற்று சாதனை படைக்க இருக்கும் ரோஹித்; இந்திய அணியின் அடுத்த கேப்டன் இவரா..?
Rohit is set to create history today whos next captain of the Indian team
09-வது ஐசிசி சாம்பியன் கோப்பை போட்டியின் இறுதி போட்டி இன்று துபாய் சர்வதேச ஸ்டேடியத்தில் நடைபெறவுள்ளது. இதில் இந்திய மற்றும் நியூஸ்லாந்து அணிகள் பல பரிட்சை நடத்தவுள்ளது.
இந்நிலையில் இன்றைய ஆட்டத்தில் இந்திய அணியின் கேப்டன் இறுதி போட்டியில் 79 ரன்கள் எடுக்கும் பட்சத்தில், இந்த ஸ்டேடியத்தில் ஒரு நாள் சர்வதேச போட்டியில் 500 ரன்களை எடுத்த முதல் வீரர் என்ற சாதனையை படைக்க வாய்ப்பு உள்ளது. டுபாய் ஸ்டேடியத்தில் ரோகித் இதுவரை 421 ரன்கள் எடுத்துள்ளார்.

அத்துடன், இன்றைய போட்டியில் ரோகித் சர்மா வெறும் 04 ரன்களை எடுத்தால் கூட சாதனை படைக்க வாய்ப்பு உள்ளது. ஏனெனில், ஸ்காட்லாந்தின் ரிச்சி பெர்ரிங்டன் இந்த ஸ்டேடியத்தில் 425 ரன்களை எடுத்துள்ளார். ஆக, அவரை முந்தி, ஒரு நாள் சர்வதேச போட்டியில் அதிக ரன்களை எடுத்த வீரர் என்ற பெருமையையும் பெற முடியும்.
சாம்பியன்ஸ் டிராபி இறுதி போட்டிக்கு தகுதி பெற்றதன் மூலம், ஏற்கெனவே ஐ.சி.சி.யின் அனைத்து வகையான போட்டி தொடரின் இறுதி போட்டிக்கும் அணியை அழைத்து சென்ற முதல் கேப்டன் என்ற பெருமையை ரோகித் சர்மா பெற்றுள்ளார்.

இறுதி போட்டிக்கு பின்னர், ஒரு நாள் சர்வதேச போட்டி மற்றும் டெஸ்ட் போட்டிக்கான கேப்டனாக தொடர்ந்து ரோகித் நீடிப்பாரா? என்பது பற்றி பி.சி.சி.ஐ. முடிவு செய்யும் என கூறப்படுகிறது. 2027-ஆம் ஆண்டுக்கான ஒரு நாள் சர்வதேச போட்டிக்கான உலக கோப்பை தொடருக்கு நிலையான தலைமை வேண்டும் என பி.சி.சி. எதிர் பார்க்கின்றமை குறிப்பிடத்தக்கது.
சாம்பியன்ஸ் டிராபியில், ரோஹித் சர்மா கேப்டனாகவும், ஷுப்மன் கில் துணைக் கேப்டனாகவும் இருக்கிறார்கள். இதனால், ரோஹித்திற்கு பிறகு ஷுப்மன் கில்லுக்கு ஒருநாள் மற்றும் டெஸ்ட் அணிக் கேப்டன் பதவியை கொடுக்க வாய்ப்பு இருப்பதாக பலரும் கருதிய நிலையில், சாம்பியன்ஸ் டிராபி தொடர் முடிந்தப் பிறகு இந்திய ஒருநாள், டி20 அணிகளுக்கு ஒரு கேப்டனையும், டெஸ்ட் அணிக்கு ஒரு கேப்டனையும் நியமிக்க பிசிசிஐ முடிவு செய்துள்ளது.

சூர்யகுமார் யாதவை தூக்கிவிட்டு இந்திய டி20, ஒருநாள் அணிகளுக்கு ஹர்திக் பாண்டியாவை கேப்டனாக நியமிக்க பிசிசிஐ முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
அத்துடன், டெஸ்ட் அணிக்கு பும்ராவை கேப்டனாக நியமிக்கலாமா அல்லது ஷுப்மன் கில்லிடம் அந்த பொறுப்பை ஒப்படைக்கலாமா என்பது குறித்து பிசிசிஐ பரிசீலித்து வருவதாகவும் கூறப்படுகிறது. பும்ராவை இனி முழுக்க முழுக்க டெஸ்டில் மட்டும் பயன்படுத்திவிட்டு, ஐசிசி தொடர்களின்போது மட்டும் டி20, ஒருநாள் பார்மெட்டில் விளையாட வைப்பது குறித்தும், பிசிசிஐ கூட்டத்தில் ஆலோசித்ததாக கூறப்படுகிறது.
English Summary
Rohit is set to create history today whos next captain of the Indian team