தேடப்பட்டு மூன்று பெண் மாவோயிஸ்டுகள் கைது; காவல்துறை டி.ஐ.ஜி. அறிவிப்பு ..! - Seithipunal
Seithipunal


ஒடிசா மாநிலம் மங்கலகிரி மாவட்டத்தில் தேடப்பட்டு மூன்று பெண் மாவோயிஸ்டுகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஒடிசா மாநிலம் சித்திரகொண்டா காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதியில், நீண்ட நாட்களாக தேடப்பட்டு வந்த சந்திராமா, பபிதா மற்றும் சுனிதா ஆகிய 3 பெண் மாவோயிஸ்டுகளே கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

கைது செய்யப்பட்ட சந்திராமா என்ற பெண் 2018-ல் மாவோயிஸ்டு அமைப்பில் சேர்ந்துள்ளார். அவரது தலைக்கு 4 லட்சம் ரூபாய் சன்மானம் அறிவிக்கப்பட்டிருந்தது.

அதே போல் கமலா மற்றும் சுனிதா ஆகிய இரு பெண்களும் 2021-ம் ஆண்டு மாவோயிஸ்டு அமைப்பில் சேர்ந்துள்ளனர். 

அவர்கள் இருவரின் தலைக்கும் தலா 02 லட்சம் ரூபாய் சன்மானம் அறிவிக்கப்பட்டிருந்தது. இவர்கள் 03 பேரும் மங்கலகிரி மாவட்டத்தில் உள்ள தகடபதார் என்ற கிராமத்தை சேர்ந்தவர்களாவர்.

அத்துடன், பாதுகாப்பு படையினர் மீது நடத்தப்பட்ட பல்வேறு துப்பாக்கி சூடு சம்பவங்களில் குறித்த 03 பெண் மாவோயிஸ்டுகளுக்கும் தொடர்பு இருப்பதாக காவல்துறை டி.ஐ.ஜி. நிதி சேகர் தெரிவித்துள்ளார்.

இவர்கள் மேலும் பல தாக்குதல்களை நடத்த திட்டமிட்டு வந்தது விசாரணையில் தெரியவந்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Three Maoists have been arrested in Mangalagiri district of Odisha


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->