கர்நாடகாவில் சோகம் - வெடித்துச் சிதறிய பட்டாசு குடோன் - தொழிலாளிகளின் நிலை என்ன? - Seithipunal
Seithipunal


கர்நாடகாவில் சோகம் - வெடித்துச் சிதறிய பட்டாசு குடோன் - தொழிலாளிகளின் நிலை என்ன?

கர்நாடக மாநிலத்தில் உள்ள ஹாவேரி மாவட்டத்தை சேர்ந்தவர் குமார். இவர் ஊருக்கு ஒதுக்குப்புறமான பகுதியில் பட்டாசு கிடங்கு ஒன்று வைத்து நடத்தி வருகிறார். அந்தப் பட்டாசு கிடங்கில் பண்டிகை நாட்களில் சிவகாசியில் இருந்து பட்டாசுகளை வாங்கி வந்து விற்பனை செய்து வந்தார்.

அதன் படி குமார் வருகிற விநாயகர் சதுர்த்தி பண்டிகையை முன்னிட்டு சிவகாசியில் இருந்து ஒன்றரை கோடி ரூபாய்க்கு பட்டாசுகளை வாங்கி வந்து தனது கிடங்கில் இருப்பு வைத்திருந்தார்.

இந்த நிலையில், இந்தப் பட்டாசு கிடங்கின் மாடியில் நேற்று வெல்டிங் பணி நடைபெற்றுள்ளது. இந்தப் பணியில், அதே பகுதியைச் சேர்ந்த வாசிம் ஹரிகர் என்ற தொழிலாளி ஈடுபட்டிருந்த போது, தீப்பொறி சில பட்டாசுகள் மீது விழுந்துள்ளது. 

இதில், பட்டாசுகள் தீப்பிடித்து எரிந்து வெடித்துச் சிதறியுள்ளது. இதைப்பார்த்து சுதாரித்துக்கொண்ட வாசிம் ஹரிகர் மாடியில் இருந்து கீழே குதித்து லேசான காயத்துடன் உயிர் தப்பினார்.  

இந்தத் தீ விபத்தினால் அப்பகுதி முழுவதும் புகை மண்டலமும், நெருப்புமாக காட்சியளித்தது. இதுகுறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். 

பலமணி நேர போராட்டத்திற்குப் பின்னர் தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இதையடுத்து தீயணைப்புத் துறையினர் தீ விபத்தில் தொழிலாளர்கள் யாராவது பலியாகியுள்ளனரா? என்று உள்ளே சென்று பார்த்துள்ளனர்.

அப்போது காடேனஹள்ளி கிராமத்தை சேர்ந்த திம்மப்பா ஒலேகாரா, ரமேஷ் பார்கி, சிவலிங்கா அக்கி உள்ளிட்ட 3 பேர் தீயில் சிக்கி கருகிய நிலையில் பிணமாக கிடந்தனர். அவர்களது உடல்களை போலீஸார் மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

அதன் பின்னர் இந்தச் சம்பவம் தொடர்பாக போலீஸார், கிடங்கு உரிமையாளர் குமார் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்தச் சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

three peoples died for firecrackers explossion in karnataga


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->