கேரளா அமைச்சரின் பாதுகாப்பு வாகனம் மோதி தடம் புரண்ட ஆம்புலன்ஸ் - மூன்று பேர் படுகாயம்.!! - Seithipunal
Seithipunal


கேரளா அமைச்சரின் பாதுகாப்பு வாகனம் மோதி தடம் புரண்ட ஆம்புலன்ஸ் - மூன்று பேர் படுகாயம்.!!

நமது அண்டை மாநிலமான கேரளாவில் கொட்டாரக்கரா தாலுகா மருத்துவமனையில் இருந்து திருவனந்தபுரம் மருத்துவக் கல்லூரிக்கு நோயாளியுடன் ஆம்புலன்ஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. 

அப்போது கொட்டாரக்கரை புலமண் சந்திப்பில் சிக்னல் வேலை செய்யாமல் இருந்ததால் போலீசார் போக்குவரத்தை சீர் செய்து கொண்டிருந்தனர். சிக்னலில் இருந்த போலீசார் ஆம்புலன்ஸ் வேனைக் கடந்து செல்லுமாறு சைகை செய்தனர். 

இதனால் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் சாலையை கடக்க முயற்சி செய்தார். அப்போது அங்கு வந்த கேரள மாநிலத்தின் கல்வித்துறை அமைச்சர் சிவன்குட்டியின் பாதுகாப்பு வாகனம் சாலையை கடந்த ஆம்புலன்ஸ் வேன் மீது வேகமாக மோதி விபத்துக்குள்ளானது .

இந்த விபத்தில் நோயாளியுடன் சென்ற ஆம்புலன்ஸ் சாலையில் உருண்டதால் ஆம்புலன்சில் இருந்த மூன்று பேர் படுகாயம் அடைந்தனர். உடனே போக்குவரத்தைச் சரிசெய்து கொண்டிருந்த போலீசார் காயமடைந்தோரை மீட்டு கொட்டாரக்கரை பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.

அங்கு மருத்துவர்கள் அவர்களுக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர். இதற்கிடையே இந்த விபத்து தொடர்பான சிசிடிவி வீடியோ காட்சிகள் தற்போது வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

three peoples injured for kerala minister security vechicle hit in kerala


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->