கர்நாடகா : பெங்களூரில் கியாஸ் குழாய் மூன்று பேர் காயம்.! - Seithipunal
Seithipunal


கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூரு கெயில் நிறுவனம் சார்பில் பூமிக்கு அடியில் கியாஸ் குழாய் பதிக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில், நேற்று காலை இந்த பகுதியில் பெங்களூரு குடிநீர் மற்றும் வடிகால் வாரியம் சார்பில் குழி தோண்டப்பட்டது. 

அப்போது எதிர்பாராத விதமாக கியாஸ் குழாயில் உடைப்பு ஏற்பட்டதனால் கியாஸ் கசிந்து குழாய் திடீரென வெடித்து சிதறியது. இதில், இரண்டு வீடுகளில் இருந்த பொருட்கள் கீழே விழுந்து உடைந்து தீ விபத்து ஏற்பட்டுள்ளது. 

இதில், மூன்று பேர் பலத்த காயம் அடைந்துள்ளனர். இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் சம்பவம் குறித்து தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் அளித்துள்ளனர். அதன் படி தீயணைப்பு படைவீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடைப்பு ஏற்பட்ட கியாஸ் குழாயை சரி செய்து பின்னர் அப்பகுதியில் பற்றி எரிந்த தீயையும் அணைத்தார்கள். 

இதையடுத்து, தீயணைப்பு வீரர்கள் காயமடைந்த மூன்று பேரையும் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். இதற்கிடையே சம்பவம் குறித்து போலீசார் நடத்திய விசாரணையில், பலத்த காயம் அடைந்த மூன்று பேருக்கும் 30 சதவீத தீக்காயம் ஏற்பட்டு இருப்பது தெரிந்தது. 

இந்த நிலையில், குடிநீர் மற்றும் வடிகால் வாரியம் கெயில் நிறுவனத்திடம் முறையாக தெரிவிக்காமல், குழி தோண்டியதால், கியாஸ் குழாய் வெடித்து சிதறி பெரும் அசம்பாவிதம் ஏற்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேலும், போலீசார் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

three peoples injury for gas pipeline explossion


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->