ஹோலி பண்டிகையில் சோகம் - பெங்களூருவில் 3 பேர் கொலை.!
three peoples murder holi festival in banglaore
கர்நாடக மாநிலம் பெங்களூரு புறநகர் மாவட்டத்தில் உள்ள ஆனேக்கல் தாலுகா சர்ஜாப்புரா பகுதியில் அடுக்குமாடி கட்டிடங்கள் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணியில் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த ஏராளமான தொழிலாளர்கள் தங்கி வேலை பார்த்து வருகின்றனர். இந்த நிலையில் அவர்களுக்கு ஹோலி பண்டிகையையொட்டி மூன்று நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், நேற்று மதியம் பீகாரை சேர்ந்த தொழிலாளர்கள் மது விருந்து நடத்தினர். இந்த விருந்தில் மொத்தம் 11 பேர் கலந்து கொண்டனர். அவர்கள் அனைவரும் ஒன்றாக அமர்ந்து மது குடித்தபோது திடீரென தகராறு ஏற்பட்டது. இந்தத் தகராறில் திடீரென ஒருவர் மூன்று பேரை இரும்பு கம்பி மற்றும் மது பாட்டில்களால் சரமாரியாக தாக்கினார்.

இந்தத் தாக்குதலில் அவர்கள் மூன்று பேரும் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்கள். இதைப்பார்த்த சக இளைஞர்கள் சம்பவம் குறித்து போலீஸாருக்குத் தகவல் அளித்தனர். அதன் படி அவர்கள் விரைந்து வந்து 3 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் சம்பவம் தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில், கொலை செய்யப்பட்ட நபர்களில் ஒருவர், கொலை செய்த நபரின் தங்கையுடன் பேசி வந்ததனால் தாக்கியதாகவும், அவரை மற்ற 2 பேர் தடுத்ததனால் 3 பேரையும் அந்த நபர் இரும்பு கம்பியால் தாக்கி கொன்றது தெரியவந்தது.
இதுகுறித்து போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஹோலி பண்டிகை கொண்டாட்டத்தில் பீகார் வாலிபர்கள் மூன்று பேர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெங்களூரு புறநகர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
three peoples murder holi festival in banglaore