கேரளா விடுதியில் 3 பேர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் - விசாரணையில் வெளியான பகிர் தகவல்.!! - Seithipunal
Seithipunal


கேரளா விடுதியில் 3 பேர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் - விசாரணையில் வெளியான பகிர் தகவல்.!!

கேரள மாநிலத்தில் உள்ள கொச்சி அருகே திருப்பூணித்துறை பகுதியை சேர்ந்தவர்கள் சந்தோஷ் பீட்டர்-சுனி பீட்டர் தம்பதியினர். இவர்களுடைய மகள் ஐரின். கேரளவைச் சேர்ந்த இவர்கள் கடந்த பல வருடங்களாக சென்னையில் வசித்து வந்தனர்.

இந்த நிலையில், சந்தோஷ் பீட்டர் கேரள மாநிலதின் திருச்சூருக்கு குடும்பத்துடன் சென்றுள்ளனர். அங்கு அனைவரும் பேருந்து நிலையம் அருகே உள்ள ஒரு லாட்ஜில் அறை எடுத்து தங்கியுள்ளனர். நீண்ட நேரமாகியும் அறையில் இருந்து வெளியே வராததால் லாட்ஜ் ஊழியர்களுக்கு சந்தேகம் எழுந்தது.

இதையடுத்து ஊழியர்கள் கதவை தட்டியுள்ளனர். ஆனால், கதவு உள்புறமாக தாழ்ப்பாள் போடப்பட்டிருந்தது. அதன் பின்னர் ஊழியர்கள் கதவை உடைத்துப் பார்த்த போது மூன்று பேரும் லாட்ஜில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டு பிணமாகத் தொங்கியுள்ளனர்.

இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த ஊழியர்கள் சம்பவம் குறித்து போலீஸாருக்குத் தகவல் அளித்துள்ளனர். அந்த தகவலின் படி போலீசார் விரைந்து வந்து மூன்று உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அதன் பின்னர் போலீசார் சம்பவம் நடந்த அறையில் பரிசோதனை நடத்தினர். அப்போது, சந்தோஷ் பீட்டர் தற்கொலைக்கு முன் எழுதி வைத்திருந்த ஒரு கடிதம் சிக்கியது. அந்தக் கடிதத்தில், தங்களை சிலர் ஏமாற்றி விட்டதாகவும், பண நெருக்கடிகாரணமாக தற்கொலை செய்து கொள்வதாகவும் தெரிவித்திருந்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

three peoples sucide in kerala lodge


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->