முன்னாள் உயர்கல்வித்துறை அமைச்சருக்கு சிறை தண்டனை.!  - Seithipunal
Seithipunal


உத்தரப் பிரதேசம் மாநிலத்தில் 2007 முதல் டிசம்பர் 2011 வரை உயர்கல்வி அமைச்சராக இருந்த ராகேஷ் தர் திரிபாதி மீது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக கடந்த 2013-ம் ஆண்டு வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கு எம்.பி.- எம்.எல்.ஏக்கள் வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த நிலையில், இந்த வழக்கில் இன்று தீர்ப்பளிக்கப்பட்டது. அதில், திரிபாதிக்கு மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனை மற்றும் 10 லட்சம் அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளது. 

இதற்கிடையே  திரிபாதியின் ஜாமீன் மனுவை நீதிமன்றம் ஏற்றுக் கொண்டதாக மாவட்ட அரசு வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். கடந்த 2014-ம் ஆண்டு பகுஜன் சமாஜ் கட்சியில் ராகேஷ் தர் திரிபாதி நீக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

three years jail penalty to formar higher education officer rakesh dhar tripati in uttar pradesh


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->