திருப்பதியில் ஹிந்துக்கள் மட்டும் கடை நடத்த அனுமதி - தேவஸ்தானம் அதிரடி உத்தரவு.!
tirupathi devasthanam decision only hindu allowed shop run in tirupathi
ஆந்திரா மாநிலத்தில் உள்ள திருப்பதியில் பிரசித்தி பெற்ற ஏழுமலையான் கோவில் அமைந்துள்ளது. இந்தக் கோவிலில் பக்தர்களுக்கு வழங்கப்படும் லட்டு பிரசாதத்தில், விலங்கு கொழுப்பு கலந்த நெய் பயன்படுத்தப்பட்டதாக சமீபத்தில் சர்ச்சை எழுந்தது.
இதனால், திருப்பதி கோவிலை நிர்வகிக்கும் திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் நிர்வாக அறக்கட்டளை நிர்வாகிகள் சமீபத்தில் மாற்றப்பட்டனர். இதையடுத்து பி.ஆர்.நாயுடு தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் தேவஸ்தானத்தின் அறங்காவலர் குழு கூட்டம் நடந்தது.
இதுகுறித்து பி.ஆர். நாயுடு தெரிவித்துள்ளதாவது:- "ஹிந்து கோவிலில் ஹிந்துக்களை தவிர மற்ற மதத்தினர் பணியாற்ற அனுமதிக்க முடியாது. ஹிந்து மக்களின் நியாயமான கோரிக்கையை ஏற்று எடுக்கப்பட்ட இந்த முடிவின் படி தேவஸ்தானம் கோவில்களில் பணியாற்றும் அனைத்து மாற்று மதத்தினரும் வேறு பணிகளுக்கு மாற்றப்படுவர்.
திருப்பதி கோவில் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் கடைகள் வைப்பதற்கு ஹிந்துக்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும். முந்தைய ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் ஆட்சியில், மும்தாஜ் என்ற பெயரில் ஹோட்டல் நடத்த அனுமதிக்கப்பட்டது.
அந்த ஹோட்டல் சட்டவிதிகளை மீறியது. அதனால் அதன் அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது. இனி, திருப்பதியில் ஹிந்துக்கள் மட்டுமே கடைகள் நடத்த அனுமதிக்கப்படுவர்" என்றுத் தெரிவித்துள்ளார்.
English Summary
tirupathi devasthanam decision only hindu allowed shop run in tirupathi