திருப்பதியில் பக்தர்கள் திடீர் மறியல் போராட்டம்: நடந்தது என்ன? - Seithipunal
Seithipunal


திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கடந்த 22 ஆம் தேதி முதல் இன்று வரை பக்தர்கள் தரிசனத்திற்காக வைகுண்ட வாசல் திறக்கப்பட்டு அனுமதிக்கப்பட்டது. 

இதற்காக 9 இடங்களில் 4 லட்சம் தரிசன டிக்கெட் வழங்கப்பட்டது. இந்த தரிசனம் டிக்கெட் பெற்றவர்கள் மட்டும் சுமார் 10 நாட்களாக சுவாமி தரிசனம் செய்வதற்கு அனுமதிக்கப்பட்டனர். 

நேரடி இலவச தரிசனம் ரத்து செய்யப்பட்டதால் பக்தர்கள் இலவச தரிசனத்திற்கு வர வேண்டாம் என தேவஸ்தானம் அறிவித்தது. 

இந்நிலையில் புத்தாண்டை முன்னிட்டு நேற்று இரவு திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்வதற்காக சென்றவர்கள் வைகுண்டம் க்யூ காம்ப்ளக்ஸ் பகுதிக்கு சென்றனர்.

அங்கிருந்து அதிகாரிகள் நேரடி இலவச தரிசனத்திற்கு அனுமதி இல்லை என தெரிவித்து பக்தர்களை தடுத்து நிறுத்திய போது கோவில் ஊழியர்களுக்கும் பக்தர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. 

இதனால் பக்தர்கள் திருப்பதி தேவஸ்தான அலுவலகத்தை முற்றுகையிட்டனர். இருப்பினும் நேரடி இலவச தரிசனத்திற்கு அனுமதி இல்லை என தொடர்ந்து தெரிவிக்கப்பட்டதால் ஆத்திரமடைந்த பக்தர்கள் அங்கிருந்த சாலைகளில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். 

இது குறித்து தகவல் அறிந்த தேவஸ்தான அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பக்தர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் செய்தனர். 

இதனை தொடர்ந்து பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்யாமல் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். இந்த சம்பவத்தால் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பெரும் பரபரப்பு நிலவியது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tirupathi devotees protesting


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->