திருப்பதி தரிசன டிக்கெட் இனி கள்ளச் சந்தையில் விற்கப்படாது - சந்திரபாபு நாயுடு!! - Seithipunal
Seithipunal


தரிசன டிக்கெட் கள்ளச் சந்தையில் விற்கப்படாது. இந்த புனிதமான இடத்தை அவர்கள் கஞ்சா, மது, அசைவ உணவுகளில் கூடாரமாக மாற்றி விட்டனர். அதை தெலுங்கு தேசம் கட்சி தூய்மையாக்கும் என்று கூறியுள்ளார்.

ஆந்திராவில் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் தெலுங்கு தேசம் கட்சியின் தலைமையில் ஜன சேனா மற்றும் பாஜக கூட்டணி முந்தைய ஆளும் கட்சியான ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியை எதிர்த்து போட்டியிட்டது.  இந்த தேர்தலில் தெலுங்கு தேசம் கட்சி 135 இடங்களில் அறுதிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றது.

இந்நிலையில் ஆந்திராவில் உள்ள விஜயவாடாவின் புறநகர்ப் பகுதியான கண்ணாவரத்தில் இன்று காலை முதல்  பதவியேற்பு விழா நடைபெறுகிறது. மிக பிரம்மாண்டமாக நடைபெறும் இந்த பதவியேற்பு விழாவில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டுள்ளனர்.

இந்த விழாவில் ஆந்திர முதலமைச்சராக சந்திரபாபு நாயுடு 4வது முறையாக பதவி ஏற்றுக் கொண்டுள்ளார். அவருக்கு ஆந்திர மாநில ஆளுநர் நசீர் பதவி பிரமாணம் செய்து வைத்தார். சந்திரபாபு நாயுடுவைத் தொடர்ந்து பவன் கல்யாண் மற்றும் 24 அமைச்சர்களும் பதவி ஏற்றுக் கொண்டுள்ளனர்.

ஆந்திராவின் முதலமைச்சர் ஆக பதவி ஏற்ற சந்திரபாபு நாயுடு குடும்பத்துடன் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்து சந்திரபாபு நாயுடு பேசுகையில், ஜெகன்மோகன் ரெட்டியின் ஆட்சியில் திருப்பதி கோவில் வணிகமாக்கப்பட்டு விட்டது.

இனி கோவிலில் வழங்கப்படும் பிரசாதம் தரமாகவும் விலை ஏற்பட்டாலும் இருக்கும். தரிசன டிக்கெட் கள்ளச் சந்தையில் விற்கப்படாது. இந்த புனிதமான இடத்தை அவர்கள் கஞ்சா, மது, அசைவ உணவுகளில் கூடாரமாக மாற்றி விட்டனர். அதை தெலுங்கு தேசம் கட்சி தூய்மையாக்கும் என்று கூறியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tirupati Darshan tickets will no longer be sold in fake market Chandrababu Naidu


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->