திருப்பதி ஏழுமலையான் கோவில் தரிசன டிக்கெட்டை பெற புதிய வழி.. ஆந்திர அரசு அறிவிப்பு.!! - Seithipunal
Seithipunal


கொரோனா பரவல் காரணமாக திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு செல்ல, 300 ரூபாய் சிறப்பு தரிசன டிக்கெட்டை முன்பதிவு செய்து செல்லவேண்டும்.

இதனிடையே திருப்பதிக்கு ஆந்திரா பேருந்தில் வரும் பக்தர்களுக்கு 300 ரூபாய் சிறப்பு தரிசன டிக்கெட் வழங்கும் திட்டத்தை அம்மாநில அரசு தொடங்கியுள்ளது. திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க முன்பதிவு மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், பலரால் ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்ய முடியவில்லை. 

இந்நிலையில், சென்னை, புதுச்சேரி, பெங்களூர் நகரங்களில் இருந்து திருப்பதி செல்லும் ஆந்திரா பேருந்துகளில் பக்தர்களுக்கு 300 ரூபாய் தரிசன டிக்கெட் பெறும் வசதி மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. தினந்தோறும் ஆயிரம் டிக்கெட்டுகள் பயணிகளுக்கு வழங்கப்படும் என ஆந்திர போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது. ஆந்திர அரசு போக்குவரத்து கழகத்தில் பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும் விதமாக இத்திட்டம் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

tirupati darshana ticket in andhra bus


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->