எங்க கூட்டணிக்கு வாங்க விஜய்! கூட்டணி அழைப்பை விடுத்த காங்கிரஸ்! - Seithipunal
Seithipunal


தமிழ்நாடு வெற்றிக்கழக தலைவர் விஜய், இந்தியா கூட்டணியில் சேர வேண்டும் என்று, தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப்பெருந்தகை நேரடியாகவே அழைப்பு விடுத்துள்ளார்.

சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த செல்வப்பெருந்தகை தெரிவித்தாவது, "புதிய விமான நிலையம் உள்ள பரந்தூர் ஏகனாபுரம் பகுதி எனது சட்டப்பேரவைத் தொகுதி. மக்களிடம் பலமுறை நேரில் சென்று பேசியுள்ளேன். 

மக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் பரந்தூர் விமான நிலையத் திட்டத்தை செயல்படுத்தலாம் என்று முன்மொழிந்துள்ளேன். தமிழக அரசு மக்களின் கோரிக்கைகளுக்கு கவனம் செலுத்த வேண்டும்.  

விஜய் தனது கட்சி மாநாட்டில் மதவாத சக்திகளுக்கு எதிராகக் கருத்து தெரிவித்தார். இந்துத்துவா சக்திகளை அகற்ற அவர் முனைவது உறுதியாகத் தெரிகிறது. 

இதுதான் அவரின் இலக்கு எனில், இந்தியா கூட்டணியில் இணைவது அனைவருக்கும், குறிப்பாக அவருடைய கொள்கை, கோட்பாட்டிற்கும் நல்லது” என்று தெரிவித்தார்.

இதற்கிடையே, தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் வரும் 20 ஆம் தேதி பரந்தூரில் போராடும் மக்களை நேரில் சந்திக்கவுள்ளார்.  

இதற்கான அனுமதியை காவல்துறை வழங்கியதோடு, பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Congress alliance call to TVK Vijay


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->