திருப்பதியில் ரூ.300 தரிசன டிக்கெட் இன்று ஆன்லைனில் வெளியீடு.! - Seithipunal
Seithipunal


திருப்பதியில் ஏழுமலையானை மே மாதம் தரிசிப்பதற்கான ரூபாய் 300 தரிசன டிக்கெட் இன்று ஆன்லைனில் வெளியிடப்படுகிறது.

உலக பிரசித்தி பெற்ற மிகவும் சிறப்பு வாய்ந்த முக்கிய திருத்தலங்களில் ஒன்றான திருப்பதி ஏழுமலையான் கோவில், ஆந்திர பிரதேசம் மாநிலத்தின் தென்கிழக்கு பகுதியில் அமைந்துள்ளது. இங்கு இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து தரிசனம் பெறுவார்கள். இந்நிலையில் திருப்பதி ஏழுமலையானை தரிசிப்பதற்கான மே மாதம் ரூ.300 நுழைவு கட்டண டிக்கெட் இன்று ஆன்லைனில் காலை 10 மணிக்கு வெளியிடப்பட உள்ளது.

இதனை பக்தர்கள் https://tirupathibalaji.ap.gov.in என்ற இணையத்தில் முன்பதிவு செய்து கொள்ளலாம் என்று திருப்பதி திருமலை தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. மேலும் TTDevasthanams என்ற தேவஸ்தானத்தின் அதிகாரப்பூர்வ மொபைல் செயலியிலும் டிக்கெட் பதிவு செய்துகொள்ளலாம். 

இதையடுத்து திருமலையில் மே மாதம் பக்தர்கள் தங்குவதற்கான அறைகள் முன்பதிவு நாளை மறுதினம் 26ம் தேதி காலை 10 மணிக்கும், திருப்பதியில் உள்ள அறைகள் ஏப்.27ம்தேதி காலை 10 மணிக்கும் வெளியிடப்பட உள்ளது. எனவே, பக்தர்கள் தங்களுக்கு தேவையான டிக்கெட் மற்றும் அறைகளை முன் பதிவு செய்து கொள்ளலாம் என்று தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tirupati Rs 300 darshan tickets released online today


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->