ஆந்திரா வனப்பகுதியில் செம்மரக் கடத்தலில் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள்...! அதிரடியில் வனத்துறையினர்...!
TN nationals caught smuggling redwood Andhra Pradesh forests Forest department
ஆந்திரா பிரதேச மாநிலம் ஸ்ரீ காளஹஸ்தி வனப்பகுதியில் அதிரடியாக செம்மரக் கடத்தல் அதிரடிப்படை காவலர்கள் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

இந்தத் திடீர் சோதனை நடத்திய வாகனத்தில், ரூ.2.5 கோடி மதிப்பிலான 72 செம்மரக்கட்டைகள் காவலர்களால் பறிமுதல் செய்யப்பட்டன.
மேலும், இந்த கடத்தலில் ஈடுபட்ட தமிழ்நாட்டைச் சேர்ந்த 3 பேர் உட்பட 7 பேரை காவலர்கள் கைது செய்துள்ளனர்.
இந்த தடை செய்யப்பட்ட கடத்தல் சம்பவம் தொடர்பாக காவலர்கள் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
பலமுறை அதிரடி நடவடிக்கை எடுத்தும் அவ்வப்போது இவ்வாறு நடப்பதற்கு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
English Summary
TN nationals caught smuggling redwood Andhra Pradesh forests Forest department