வக்பு வாரிய திருத்தச் சட்டத்திற்கு எதிரான வழக்கு - உச்ச நீதிமன்றம் எடுக்கப்போகும் முடிவு என்ன?
today hearing waqf law against cases in supreme court
வக்பு வாரிய திருத்தச் சட்டத்திற்கு எதிரான வழக்கு இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வர உள்ளது.
மக்களவை மற்றும் மாநிலங்களவையில் பல்வேறு எதிர்ப்புகளுக்கு மத்தியில் வக்பு வாரிய திருத்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டது. இதற்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு ஒப்புதல் அளித்தார். குடியரசுத் தலைவரின் ஒப்புதலை தொடர்ந்து அது சட்டமாகி நடைமுறைக்கு வந்துள்ளது.

ஆனால், இந்த சட்டத்தை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டு வருகின்றன. அதன் படி இந்த சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக, விடுதலை சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்டு, தமிழக வெற்றிக்கழகம் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் ரிட் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
இந்த நிலையில், இந்த மனுக்களை தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா, சஞ்சய் குமார், கே.வி.விஸ்வநாதன் உள்ளிட்ட அமர்வு இன்று விசாரிக்க உள்ளது. இந்த விசாரணையின் முடிவில் அதற்கான தீர்ப்பு வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
English Summary
today hearing waqf law against cases in supreme court