இன்று இந்தியாவின் மூன்றாவது குடியரசுத் தலைவர் பிறந்த தினம்.!
Today indias 3rd president Birthday
இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவரான ஜாகீர் உசேன் 1897ஆம் ஆண்டு பிப்ரவரி 8ஆம் தேதி தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் பிறந்தார்.
இவர் சுதந்திரப் போராட்ட இயக்கத்திலும் தீவிரமாகப் பங்கேற்றுள்ளார். ஆதாரக் கல்வி முறை குறித்தும், கல்வி வளர்ச்சி பற்றியும் பல நூல்களை எழுதியுள்ளார். பிளேட்டோவின் 'குடியரசு" நூலை உருது மொழியில் மொழிபெயர்த்துள்ளார்.
காந்திஜி அழைப்பின் பேரில் இந்திய உயர்நிலைப் பள்ளிக்கல்வி வாரியத் தலைவராக பொறுப்பேற்றார். கல்வி சீர்திருத்தத்திற்காக பல திட்டங்களை வகுத்தார். யுனெஸ்கோ நிர்வாக வாரிய உறுப்பினராக பணியாற்றினார்.
1956ஆம் ஆண்டு மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அடுத்த ஆண்டே பீகார் மாநில ஆளுநராகப் பதவியேற்றார். 1962ஆம் ஆண்டு குடியரசு துணைத் தலைவராகவும், 1967ஆம் ஆண்டு இந்தியாவின் குடியரசுத் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். 'இந்தியா என் வீடு. இந்தியர்கள் அனைவரும் எனது குடும்பத்தினர்" என்று கூறியவர்.
இவருக்கு பத்ம விபூஷண் விருதும் (1954), பாரத ரத்னா விருதும் (1963) வழங்கப்பட்டுள்ளது. நவீன இந்தியாவை வழிநடத்தியவர்களில் ஒருவரான ஜாகீர் உசேன் 1969ஆம் ஆண்டு மறைந்தார்.
English Summary
Today indias 3rd president Birthday