இன்றே கடைசி நாள் - மாணவர்களே மிஸ் பண்ணிடாதீங்க..!
today last date of apply civil exam
யுபிஎஸ்சி எனப்படும் மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் ஐஏஎஸ், ஐபிஎஸ் உட்பட 24 விதமான உயர் பதவிகளுக்கு ஆண்டுதோறும் குடிமைப் பணி அதாவது சிவில் சர்வீஸ் தேர்வுகள் நடத்தப்படுகின்றன.
முதல்நிலை, முதன்மை, நேர்காணல் என்று மொத்தம் மூன்று கட்டங்களாக இந்தத் தேர்வுகள் நடைபெறும். இந்தத் தேர்வில் தேர்வர்கள் பெறும் மதிப்பெண்களின் அடிப்படையில் இறுதி முடிவுகள் வெளியிடப்படும்.
அதன் படி, நடப்பு ஆண்டில் 979 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை யுபிஎஸ்சி கடந்த ஜனவரி மாதம் வெளியிட்டது. முதல்நிலை தேர்வு மே 25-ம் தேதி நடைபெறவுள்ளது. இதற்கான இணையதள விண்ணப்ப பதிவு ஜனவரி 22-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் இந்தத் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் அவகாசம் இன்றுடன் நிறைவு பெறுகிறது. விருப்பம் உள்ள பட்டதாரிகள் https://upsc.gov.in எனும் வலைதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பத்தில் திருத்தம் இருந்தால் பிப்ரவரி 22 முதல் 28-ம் தேதி வரை வாய்ப்பு வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளது.
English Summary
today last date of apply civil exam