இன்று விண்ணில் பாய்கிறது எஸ்.எஸ்.எல்.வி டி-3 ராக்கெட்.!
today SSLV 3 rocket launch in sriharikotta
இஸ்ரோ, புவி கண்காணிப்பு செயல்பாடுகளுக்காக இ.ஓ.எஸ்-08 எனும் செயற்கைக்கோளை வடிவமைத்துள்ளது. இதன் எடை 175.5 கிலோ. இதனை சிறியரக எஸ்.எஸ்.எல்.வி டி-3 ராக்கெட் மூலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து இன்று காலை 9.17 மணிக்கு விண்ணில் ஏவப்பட உள்ளது.
மூன்று நிலைகளை கொண்ட இந்த ராக்கெட்டுக்கான எரிபொருளை ராக்கெட்டில் நிரப்பும் பணி நிறைவடைந்துள்ளது. இந்த ராக்கெட் திட்டமிட்ட நேரத்தில் பூமியில் இருந்து புறப்பட்டு சரியாக 13 நிமிடத்தில், 475 கிலோ மீட்டர் உயரத்தில் குறைந்த புவி வட்ட சுற்றுப்பாதையில் இந்த செயற்கைக்கோளை வெற்றிகரமாக நிலைநிறுத்த உள்ளது.
இந்த செயற்கைக்கோளில் எலக்ட்ரோ ஆப்டிகல் இன்பராரெட் பேலோடு, குளோபல் நேவிகேஷன் சாட்டிலைட் சிஸ்டம்-ரிபிளக்டோமெட்ரி பேலோட் மற்றும் எஸ்.ஐ.சி. யுவி டோசிமீட்டர் உள்ளிட்ட ஆய்வு கருவிகள் இணைக்கப்பட்டுள்ளன.
இதன் பணிக்காலம் ஒரு ஆண்டாகும். இந்த செயற்கைக்கோள் பூமியை 24 மணி நேரமும் கண்காணிக்கும். இதனால், பேரிடர் கண்காணிப்பு, சுற்றுச்சூழல் கண்காணிப்பு, தீ கண்டறிதல் உள்ளிட்ட பயன்பாடுகளுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
today SSLV 3 rocket launch in sriharikotta