ரீல்ஸ் மோகம் - நூலிழையில் பெண்ணின் உயிரைக் காப்பாற்றிய ரெயில் என்ஜின் ஓட்டுநர்.!
train driver save woman life
தற்போதைய இளைஞர்கள் மற்றும் இளம்பெண்கள் சமூக ஊடகங்களில் பிரபலம் ஆவதற்காகவே வித்தியாசமான ரீல்ஸ் வீடியோக்களை உருவாக்கி வெளியிடுகின்றனர். அதற்காக அவர்கள் செய்யும் சாகசங்கள் சில நேரங்களில் விபரீதமாகி விடுகிறது.
அந்த வகையில், ரெயில் தண்டவாளத்தில் இளம்பெண் ஒருவர் ரீல்ஸ் செய்ய முயன்று நூலிழையில் உயிர்தப்பிய வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது. அந்த வீடியோவில், பெண் ஒருவர் தனது நண்பருடன் தண்டவாளத்திற்கு அருகில் நின்று கொண்டு ரீல்ஸ் செய்வதற்காக தயாராகும் காட்சிகள் உள்ளது.
அப்போது, தண்டவாளத்தில் ரெயில் ஒன்று மெதுவாக வந்து கொண்டிருந்தது. ஆனால் அதை கவனிக்காமல் அந்த பெண் ரீல்ஸ் உருவாக்குவதிலேயே தீவிரமாக ஈடுபட்டிருந்தார்.
இந்த நிலையில் ரெயில் அந்த பெண்ணின் பக்கத்தில் வந்த போது ரெயில் என்ஜின் ஓட்டுநர் வேகமாக அந்த பெண்ணை மிதித்து தள்ளினார்.
இதனால் அந்த பெண் நூலிழையில் உயிர் பிழைத்துள்ளார். இதுதொடர்பான வீடியோ காட்சிகள் வலைதளங்களில் வைரலாகி 1.30 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளை பெற்றுள்ளது. வீடியோவை பார்த்த பயனர்கள் பலரும் பெண்ணின் உயிரை காப்பாற்றிய ரெயில் என்ஜின் ஓட்டுனரை பாராட்டி பதிவிட்டு வருகின்றனர். சில பயனர்கள் ரீல்ஸ் வீடியோ தயாரித்த பெண்ணையும், அவரது நண்பரையும் விமர்சித்து பதிவிட்டு வருகின்றனர்.
English Summary
train driver save woman life