சரக்கு ரெயில் தடம் புரண்டு விபத்து - தெலுங்கானாவில் ரெயில் சேவை பாதிப்பு..!
train service cancelled and divorted in telungana for train accident
தெலுங்கானா மாநிலத்தில் உள்ள பெத்தபள்ளி மாவட்டத்தில் இரும்பு தாது ஏற்றிச்சென்ற சரக்கு ரெயில் தடம் புரண்டது. இதனால், அந்த வழியாக செல்லும் 20 பயணிகள் ரெயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
அதுமட்டுமல்லாமல்,10-க்கும் மேற்பட்ட ரெயில்கள் மாற்றுப்பாதையில் இயக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தெற்கு மத்திய ரெயில்வே தெரிவித்துள்ளதாவது, தெலுங்கானாவில் சரக்கு ரெயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானதால் அகோலா மற்றும் அகோட்டில் இருந்து புறப்படும் ஆறு ரெயில்கள் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளன.
7 ரெயில்கள் மாற்றுப்பாதையில் இயக்கப்படுகிறது. அதாவது, மதுரை - நிஜாமுதீன் ரெயில் பெத்தபள்ளி - நிஜாமாபாத்-முத்கேட்-பிம்பால்குரி வழியாக திருப்பி விடப்பட்டது.
சென்னை சென்ட்ரல் - அகமதாபாத் நவஜீவன் எக்ஸ்பிரஸ் ரெயில் பெத்தபள்ளி-நிஜாமாபாத்-அகோலா வழியாக திருப்பி விடப்பட்டது.
பிலாஸ்பூர்-நெல்லை ரெயில் மச்சேரியல், பல்ஹர்ஷா, அகோலா, பூர்ணா, நிஜாமாபாத், பெத்தபள்ளி வழியாக திருப்பி விடப்பட்டது" என்றுத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
train service cancelled and divorted in telungana for train accident