சபரிமலை சென்ற அரசு பேருந்து மீது மரம் விழுந்து விபத்து - பயணிகளின் கதி என்ன?
tree collapse down on kerala government bus
கேரளா மாநிலத்தில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோவிலில் பங்குனி ஆறாட்டு திருவிழா மற்றும் சித்திரை விஷு சிறப்பு பூஜைகளுக்காக கடந்த 1ம் தேதி நடை திறக்கப்பட்டது. மறுநாள் (2ம் தேதி) தொடங்கிய இந்தத் திருவிழா 11ம் தேதி ஆறாட்டுடன் நிறைவடைந்தது. இதைத் தொடர்ந்து கடந்த 14ம் தேதி விஷுக்கணி தரிசனம் நடைபெற்றது.
இதனை முன்னிட்டு தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா உள்பட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் சபரிமலையில் குவிந்து வருகின்றனர். இந்த நிலையில், பம்பையில் இருந்து நிலக்கல்லுக்கு சபரிமலை பக்தர்கள் சென்ற கேரள அரசு பேருந்து மீது மரம் ஒன்று திடீரென விழுந்தது. இந்த விபத்தில் பேருந்தின் மேற்கூரை சேதமடைந்தது. ஆனால், அதிர்ஷ்டவசமாக பேருந்தில் பயணித்த அய்யப்ப பக்தர்கள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து பம்பையில் இருந்து வந்த தீயணைப்புத் துறையினர் பேருந்தின் மீது விழுந்த மரத்தை அப்புறப்படுத்தி பயணிகளை மாற்றுப் பேருந்து மூலம் பக்தர்களை அனுப்பி வைத்தனர். இதனால் அங்கு சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
English Summary
tree collapse down on kerala government bus